ஷங்கர்ராமசுப்ரமணியன்     குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன   அதனால் அழுகின்றன   அதைத் தெரிந்துகொண்டே அவை அழுகின்றன   வாயில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொம்மையை   பிடுங்கினால் அழுகின்றன   பெயர் வைக்கும்போது   அழுகின்றன   முதல் கேக்கை வெட்டி எல்லாரும்   ஹேப்பி பர்த்டே பாடும்போது அழுகின்றன   மொபைல் கருவியைச் சப்பக்கொடுக்காமல்   பிடுங்கினால்   அழுகின்றன   பலூன்கள் உடைந்துபோனால்   அழுகின்றன     உற ங்கும்போது முத்தம் கொடுத்தால்   அழுகின்றன   எழுந்து நிற்கும்போது சிரமம் ஏற்ப ட்டு   அழுகின்றன   காலுறைக்குள் கையைச் சிக்கவிட்டு   முக்காலிக்குள் மாட்டிக்கொண்டு அழுகின்றன   விஷவாயுத் தாக்குதலில் அழாமலேயே கண்விழித்தபடியும்   இறந்து போகின்றன   போர்களில்   என்ன நடக்கின்றதென்றே தெரியாமல்   இந்தக் குழந்தைகள் நம்மைக் கைவிட்டுவிடுகின்றன   இவர்கள்   இவர்கள்தான்   நொடியை விடச் சிறுகணத்தில்   அநாதைகள் ஆவதற்கு   அழதபடி காத்திருக்கிறார்கள்       குழந்தைகள் அழுவது அவர்கள் நுரையீரலுக்கு   நல்லது    நானும் என் ஆரோக்கியத்திற்காக   அழுகிறேன்   ( நன்றி :  http://thechive.com/2013/07/24/the-reasons-why-...