ஷங்கர்ராமசுப்ரமணியன்
அந்த மீன்கொத்திப் பறவைக்கு
தன் இன்னொரு பெயர்
கிங்பிஷர் என்று தெரியாது
தன் பெயரில் விமானங்கள் பறப்பதை
அது அறியாது
பேரழகிகளின் கவர்ச்சிப்படங்கள்
கொண்ட காலண்டர் ஆண்டுதோறும்
அதன் முத்திரையுடன்
வெளிவரும் செய்தியை
அதற்கு யாரும் சொல்லவேயில்லை
கிங்பிஷர் நிறுவனத்தின்
முதலாளி பூலோகத்தில்
சொர்க்கத்தின் உல்லாசங்களையெல்லாம்
அனுபவிப்பதையும்
தன் இலச்சினை பொறித்த
சீருடைப் பணியாளர்கள்
மாதச்சம்பளமின்றி
போராடும் செய்திகளையும்
கிங்பிஷர் வாசித்ததே இல்லை
தன்னைப் பற்றி
உலகில் மிதக்கும் இத்தனை தகவல்களின்
கனமேதுமின்றி
அந்த நீலநிற குட்டிப்பறவை
ஏப்ரல் வெயிலில்
நான் பயணிக்கும் பறக்கும் ரயில்தடத்திற்கும்
நகர்ப்புறச் சேரிக்கும் இடையில்
மீன்கள் அற்று
சாக்கடையாய் நிற்கும்
கூவ நதியின்
மரக்கிளையில்
இறங்கி அமர்கிறது
அதன் பெயர்
கிங்பிஷர்.
அந்த மீன்கொத்திப் பறவைக்கு
தன் இன்னொரு பெயர்
கிங்பிஷர் என்று தெரியாது
தன் பெயரில் விமானங்கள் பறப்பதை
அது அறியாது
பேரழகிகளின் கவர்ச்சிப்படங்கள்
கொண்ட காலண்டர் ஆண்டுதோறும்
அதன் முத்திரையுடன்
வெளிவரும் செய்தியை
அதற்கு யாரும் சொல்லவேயில்லை
கிங்பிஷர் நிறுவனத்தின்
முதலாளி பூலோகத்தில்
சொர்க்கத்தின் உல்லாசங்களையெல்லாம்
அனுபவிப்பதையும்
தன் இலச்சினை பொறித்த
சீருடைப் பணியாளர்கள்
மாதச்சம்பளமின்றி
போராடும் செய்திகளையும்
கிங்பிஷர் வாசித்ததே இல்லை
தன்னைப் பற்றி
உலகில் மிதக்கும் இத்தனை தகவல்களின்
கனமேதுமின்றி
அந்த நீலநிற குட்டிப்பறவை
ஏப்ரல் வெயிலில்
நான் பயணிக்கும் பறக்கும் ரயில்தடத்திற்கும்
நகர்ப்புறச் சேரிக்கும் இடையில்
மீன்கள் அற்று
சாக்கடையாய் நிற்கும்
கூவ நதியின்
மரக்கிளையில்
இறங்கி அமர்கிறது
அதன் பெயர்
கிங்பிஷர்.
Comments