ஷங்கர்ராமசுப்ரமணியன்
கனவில்
ஒரு வீட்டின்
ஜன்னலைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஜன்னல்
வழி தெரியும்
அறையில்
ஒரு
பெண்
வயது
தெரியவில்லை
யுவதியும்
அல்ல
வெறும்
பாவாடை ரவிக்கையுடன்
வந்து
நிற்கிறாள்
உடை
மாற்றப் போகிறாள் போலும்
மனமும்
கண்களும் கூர்மையடைந்து விட்டன
கடைசி
உடையை அவள் நழுவ விட்டபோது
எனக்கும்
ஜன்னலுக்கும் நடுவில்
நின்ற
மரத்தின் உச்சியிலிருந்து
ஹோவென்று
ஒரு
புறா
அந்தக்
கணத்தை மறைத்து
விழுந்ததில்
நான்
பார்க்கத் தவறியதை
அப்போதும்
பார்க்கத் தவறிவிட்டேன்.
Comments