Skip to main content

ஞாபக சீதா


  ஷங்கர்ராமசுப்ரமணியன்
 
 
 

 இலைகளின் நுனியில் குவியும்
 பாம்பின் வாலில்
 நூலென ஆடும் கூர்மை
 ஞாபக சீதா
 உன் அழகு
 உன் அகங்காரம்
 அந்தரத்தில் வானில்
 ஆடும் வாலின் நுனி
 ஊசிக்கூர்மை
 
 000
 
குப்பைச் செடிகளுக்கிடையே
 பாலிதீன் பைகளை
 மேயும் மான்களில்
 இல்லை
 உனது  பொன் மான்
 சிதறி இரைந்து கிடக்கும்
 புள்ளிகளைத் திரட்டியெழுந்து
 யார் கைகளுக்கும் சிக்காமல்
 ஒல்லிக் கால்களால்
 ஓடித் தப்பிக்கும்
 மான்களில்
 கொஞ்சம் போல் தான்
 என்றாலும் ஞாபக சீதா
 நீ கேட்ட  பொன்மான் உண்டு

Comments