ஷங்கர்ராமசுப்ரமணியன்                 ஒரு பிரக்ஞை   நெரிசலான சாலையில் பைக் ஓட்டுகிறது   இன்னொரு பிரக்ஞை   நிச்சிந்தையுடன் தெருவைக் கடக்கிறது   இரு பிரக்ஞைகள்   இரு பிரபஞ்சங்கள்   மோதிக் கொள்கின்றன   அப்போது ஓருலகம் கருக்கொள்கிறது   முதல்முறையாக ஒரு பிரக்ஞை   மற்றதை அறியத்தொடங்குகிறது   ங்கோத்தா என்கிறது   பைக்கில் வந்த பிரக்ஞை   ஏண்டா தாயோளி என்கிறது   குறுக்கே கடந்த பிரக்ஞை