Skip to main content

ஒன்று மற்றதை அறியத் தொடங்குகிறது

ஷங்கர்ராமசுப்ரமணியன்




ஒரு பிரக்ஞை
நெரிசலான சாலையில் பைக் ஓட்டுகிறது
இன்னொரு பிரக்ஞை
நிச்சிந்தையுடன் தெருவைக் கடக்கிறது
இரு பிரக்ஞைகள்
இரு பிரபஞ்சங்கள்
மோதிக் கொள்கின்றன
அப்போது ஓருலகம் கருக்கொள்கிறது
முதல்முறையாக ஒரு பிரக்ஞை
மற்றதை அறியத்தொடங்குகிறது
ங்கோத்தா என்கிறது
பைக்கில் வந்த பிரக்ஞை
ஏண்டா தாயோளி என்கிறது
குறுக்கே கடந்த பிரக்ஞை



Comments