ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஏற்கெனவே
நெருக்கடி தொடங்கிவிட்ட
காலையில்
இரண்டு பேருந்துகளுக்கிடையிலான
மரண இடுக்கில்
லாவக
மானாய் புகுந்து ஓடி
70 டியில் ஏறுகிறாள்
புதுப்பெண் முத்துச்செல்வி
மணிகள் அதிரும் கொலுசு
பளிச்சென்று ஒளிரும் மஞ்சள் சரடு
ஈரம் சொட்டும் ஜாதிமல்லி
ஒருபக்கம்
அழைக்க
அவளை தினசரி தவறாமல்
இழுத்துக் கொண்டு போகிறது
அம்பத்தூர் தொழிற்பேட்டை
Comments