தமிழில்: சபரிநாதன்
வெகு சந்தோஷமான நாள்
மூடுபனி விலகியது முன்னமே.
நான் தோட்டத்தில் வேலை செய்தேன்.
ஹனிச்சக்கில் மலர்கள் மேல் நின்று சென்றன ஹம்மிங்
சிட்டுகள்.
எனதாக்க விரும்பும் பொருள் என்று எதுவுமில்லை
பூமியில்
பொறாமை கொள்ளத் தகுதியான எவரையும் அறியவில்லை
எனைப் படுத்திய தீமைகள், அதை எல்லாம் மறந்துவிட்டேன்
முன்பொரு காலம் நான் இதே மனிதனாக இருந்ததை எண்ணுவது
அவமானமுறச்
செய்யவில்லை
வலியேதும் உணரவில்லை உடலில்
நிமிர்கையில் கண்டேன்
நீலக்கடலையும் கப்பற்பாய்களையும்
( ‘தக்கை’
இதழில் வெளியானது.)
Comments