Skip to main content

பிரம்மத்தின் சத்தம்


 ஷங்கர்ராமசுப்ரமணியன்



ஒரு வெதுவெதுப்பான உலர்ந்த
பீங்கான் கோப்பையாக
உணவுத்தட்டாக
மேஜையில் இருக்கிறேன்
அன்னம் பரிபாலிக்கப்படும்
கறியும் குழம்பும் ஊற்றப்படும்.
இந்தப் பின்மதியத்தில்
உழைத்துக் களைத்து
பசியோடு
உணவகத்தின் ஓர் ஓர நாற்காலியில் அமர்ந்து
அவன் உண்டு சவைக்கும் சத்தம்
இவ்வுலகின் ஆதிதாளம்.
பிரம்மமும் அவனும்
பரஸ்பரம் முயங்கும்
பரஸ்பரம் உண்டு விண்ணும்
ஒலியோடு
என்னையும் இணைத்துக் கொண்ட
அந்தப் பீங்கான் பாத்திரங்கள் தாம் நான்.

Comments