ஷங்கர்ராமசுப்ரமணியன்
குகையின் நீளம் கொண்ட
புதிய அட்டைப்பெட்டியில்
வீட்டுக்கு வரும் பூனைக்கு
பால் கிண்ணத்தை வைத்தாள்
எங்கள் பாப்பா
அட்டைப் பெட்டிக்குள் புகுந்து
பாலைக் குடித்தது
பூனை
உள்ளே இருப்பதாகவும்
அதை வளர்க்கப் போவதாகவும்
பாப்பா சொன்னாள்
குனிந்துபார்த்தேன்
காலியாக இருந்தது
அட்டைப் பெட்டிக்கு
இன்னொரு வாசல் உண்டு
அத்துடன் அது பூனை
வளர்ந்ததும் கூட
நாளையும் வரும் என்றேன்
அந்தக் கொழுத்த அழகிய பூனை
இன்றும் வந்தது.
Comments