Skip to main content

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ


விழுவதற்காக

நியூட்டன்

மரத்தின் கிளையை

அர்ஜூனனாய்

பார்த்துக்கொண்டே இருந்தார்.

நான் வீழ்வேனென்று

நினைத்தாயோ

என்று

ஆப்பிள்

நியூட்டனைப் பார்த்து

ஏகடியம் பேசியது.

ஒங்கொம்மால என்று

பின்பக்கம் படிந்திருந்த புழுதியை

உதறிவிட்டுக்கொண்டே எழுந்த

நியூட்டன்

கீழே கிடந்த கல்லை எடுத்து

படாரென்று ஆப்பிளின் காம்பை

குறிவைத்துத் தாக்கினார்.

Comments