Skip to main content

Posts

Showing posts from December, 2025

சாகித்ய அகாடமி விருதையும் ஆக்கிரமித்த மோடி அரசுக்கு கண்டனம்

  சாகித்ய அகாடமி விருதுகளின் வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில், சென்ற வாரம் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான நிகழ்வாகும். தமிழில் மட்டுமின்றி இந்தியாவின் 24 மொழிகளிலும் சாகித்ய அகாடமிக்கான விருதுக்குரியவர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டு, செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு டிசம்பர் 18 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவிக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு செய்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என சுயேச்சையாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளிலும் தலையீடு செய்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அடக்கிவருகிறது.  சாகித்ய அகாடமி என்ற சுதந்திரமான கலாசார அமைப்பின்மீதும் ஒன்றிய பா.ஜ.க  அரசு தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடு இது.  லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி மற்றும் தேசிய நாடகப் பள்ளி தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வாயிலாக, சாகித்ய அகாட...

பொற்கிழி என்பது அங்கீகாரம் அல்ல; நாம் புறம்தள்ள வேண்டிய பழைய மதிப்பீடு

ஜனநாயக விழுமியங்கள் ஏற்படுவதற்கு முன்னர் முடியாட்சி நடைமுறையில் இருந்த நிலையில் புலவர்கள் பொற்கிழி என்று மன்னரிடம் பெறும் நடைமுறை இருந்தது. நவீன ஜனநாயகம், சமூகநீதி என்றெல்லாம் உருவாகிவிட்ட சமூகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர்  பொற்கிழி விருதை கவிஞர். சுகுமாரன், ஆதவன் தீட்சண்யா, வ. கீதா போன்ற முற்போக்கான ஆளுமைகள் ஏற்றுக்கொள்வது சரிதானா? இந்த நடைமுறையை நாம் மாற்றுவதற்கு ஏதாவது எதிர்க்குரல் தரவேண்டாமா? எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கீகாரமே அரிது என்று அதுவே போதுமென்று இருந்துவிடலாகுமா என்ற கேள்வி எனக்கு எழுகிறது. பத்திரிகையாளரும் எனது முன்னாள் நண்பருமான சமஸ், கலைஞர் கருணாநிதி மரணமடைந்த பிறகு நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் நினைவு கருத்தரங்கில் கலைஞர் கருணாநிதியை கருணாநிதி என்று அழைத்தது அந்தக் கூட்ட அரங்கில் சர்ச்சையானது. ஆனால், அதே சமஸ், கலைஞர் கருணாநிதியின், பொற்கிழி விருதை எந்த அசூயையும் இல்லாமல் பெற்றது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நாம் சிந்தனைகள் வழியாகவும் கலைகள் வழியாகவும் பழைய நில பிரபுத்துவ மதிப்பீடுகளையும், கலைஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நடுவிலான உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யவேண்ட...