Skip to main content

Posts

Showing posts from April, 2026

நிகழை மறுத்த ஸ்ரீ ரங்கம் கண்ணன்

டி. கண்ணன் இறந்தபின்னால் சமீபத்தில் ஒரு கனவு.  ‘திருநெல்வேலியில் பழைய வீடுகளை இன்னும் கொண்டிருக்கும் தெருக்களில் ஒன்றான தெற்கு புதுத் தெருவில், நானும் கண்ணனும் போய்க்கொண்டிருக்கிறோம். அவரது மரணத்துக்குப் பிறகு முகநூலிலும் வாட்ஸப்பிலும் நண்பர்கள் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் அணிந்திருந்த அழகிய ஜிப்பாவை அணிந்திருக்கிறார். கந்தர்வன் போல எழில்குறையாமல் நடந்துவருகிறார். ஒரு பழைய பாணி கட்டடத்துக்குள் நுழைகிறோம். பகல்வேளையிலும், நித்தியமான ஒரு சாயங்காலத்தை உருவாக்கும் மஞ்சள் கண்ணாடிக்கூண்டு விளக்குகளோடு, அந்த கட்டடத்தின் பிரதான அறை இருந்தது. அதன் ஒருபக்கத்தில் பெண்கள் பெரிய பெரிய கண்ணாடி குடுவைகளுக்குப் பின்னால் பலகாரங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். “இது அருமையான பட்சணக் கடைப்பா” என்று சொல்லி, புராதனமானதாகவும் மனதுக்கு இதமாகவும் தோன்றும் மர மேஜை நாற்காலிகளில் ஒன்றில் உட்கார வைத்தார். அந்த அறையில் தைலம் போல வழிந்துகொண்டிருந்த பொன்னொளியில் கண்ணனைப் பார்த்தபடி இருக்கிறேன்.’ இந்தக் கனவின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய பண்பு உள்ளவர் டி.கண்ணன். நிலையான வேலையோ இருப்பிடமோ அமையாத சூழலில், குடி, உணவு...

அப்பாவின் ஞானத்திலிருந்து சில பகுதிகள் - ஏ. கே. ராமானுஜன்

  “ மைசூரில் கன்னடம், தமிழ், ஆங்கிலம் சரளமாகப் புழங்கிய குடும்பத்தில் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர் அத்திப்பட்டே கிருஷ்ணசாமி ராமானுஜன். கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியராக இருந்த தந்தையார் அறிவுஜீவி வாழ்க்கைக்கான ஆதர்சமாக இருந்திருக்கிறார். அம்மா கல்லூரிப் படிப்புக்குச் சென்றிருக்காவிட்டாலும் தமிழிலும் கன்னடத்திலும் விரிவாக வாசித்தவர். ஆச்சாரமானவர்களாக பெற்றோர் இருந்தாலும், வைதீகம், சடங்குகள், இறுக்கமான நம்பிக்கைகளிலிருந்து ஏ. கே. ராமானுஜன் சிறுவயதிலேயே வெளியேறுவதற்கு அவர் கற்ற கல்வி உதவியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபை பள்ளிக்கல்வி மூலம் ஆங்கில வாசிப்பில் சிறுவயதிலேயே மூழ்கத்தொடங்கியதாகச் சொல்கிறார். தமிழின் சங்க கவிதைகள், கன்னட வசனகவிதைகளை சர்வதேச அளவில் சுவாரசியமாக மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தியவர் என்பது அவரது பிரபலமான அடையாளம். வாய்மொழிக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், பழமொழிகள் மூலம் ஒரு கலாசாரத்தை தீவிரமாக ஆராயமுடியும் என்று வெளியுலகத்துக்கு உணர்த்திய இந்திய அறிஞர்களில் முதன்மையானவர் ராமானுஜன். பேராசிரியர், ஆய்வாளர், மொழியியலாளர் என பல அடையாளங்களைத் தாண்டி முத...