Skip to main content

மாக்கல் நந்தி

புகைப்படம்: எம்.கண்ணன்

நெல்லையப்பர் கோவில் மாக்கல் நந்தியை நினைவுதெரிந்த நாளிலிருந்து எனக்குப் பரிச்சயம். அப்படித்தான் இதுவரை எல்லாவற்றையும் பற்றி எனக்கு எண்ணம்
வருஷம் தோறும் மாக்கல் நந்தி வளர்வதாகவும், நந்தியின் வளர்த்தி கூரையைத் தொடும்போது உலகம் அழிந்துவிடும் என்றும் ஒரு பரம்பரைக் கதை உண்டு
வெள்ளைத்துணி பந்தல் சதுரமாய் விரிந்திருக்க மாக்கல் நந்தி, எழுந்து நின்றால் இப்போதே கூரையைத் தொட்டுவிடுவேன் என்பது போல நாக்கை மூக்கிற்குள் துழாவியபடி கம்பீரமாக இப்போதும் - நான் நெல்லையப்பரை விட அழகு என்று சொல்லியபடி- உட்கார்ந்திருக்கிறது
எனது சிறுவயதில் மாக்கல் நந்தி கருப்புவெள்ளையாக இருந்தது,  இப்போது அதன் ஆபரணங்கள் அனைத்தும் பொன்னும் வண்ணமுமாக மினுங்குகின்றன. வண்ணத்தில் கூடுதல் அழகுடன் திருநெல்வேலிக்காரனின் அக்குறும்பையெல்லாம் கண்ணில்காட்டி கருப்பன்துறைக்கு பின்புறம் காட்டி அமர்ந்திருக்கிறது மாக்கல் நந்தி
கூரையின் நிர்வாணம் தெரியும்படி யார் நீக்கினார் அந்த வெள்ளைப்பந்தலை? அது எழுந்து நின்றால் பிரளயம் நிகழும் என்ற பயத்தையும் யார் அகற்றினார்கள்?
 (கருப்பன்துறை- திருநெல்வேலியில் உள்ள பிரதான சுடுகாடு)

Comments

haikannan said…
romba nalla irukku sir.........nice.....
Unknown said…
நெல்லையப்பரையும் நந்தியையும் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. பிறந்த ஊர், சொந்த ஊர், இருக்கின்ற ஊர்..எது எனது ஊர் என்ற குழப்பம் எப்போதும் உண்டெனக்கு. சிவராத்திரி அன்று தற்போது வாழும் ஊரான அம்பத்தூரை சுற்றியிருக்கும் சிவத் தலங்களுக்குச் சென்றேன். விழித்திருந்த இரவில் சிவ தரிசனம் கிடைத்ததோ இல்லையோ அற்புதமான இரவை ரசிக்க முடிந்தது. பகிர்வுக்கு நன்றி ஷங்கர்.