Skip to main content

பழைய புத்தகக் கடை

                  ஷங்கர்ராமசுப்ரமணியன்

                                                                                                               ஓவியம் பூபேன் கக்கர்

அந்த முச்சந்தியில்
பழைய புத்தகக் கடை
தாமதமாகத் திறக்கப்படுகிறது
திறப்பவன்
சத்தமேயின்றி
கதவுப்பலகைகளை ஓரத்தில்
அடுக்குகிறான்
 கடையின் முற்றத்தைப் பெருக்குகிறான்
 தரையைப் பார்க்காமல்
 சாலையைக் கடப்பவர்களின் முகங்களில்
 தேடுகிறான்
 ஒரு அமைதி
 தலைக்கவசத்துடன் வாகனத்தில் கடக்கிறேன்
 என்னைத் தெரிந்தோ தெரியாமலோ இளிக்கிறான்
 நான் கடக்கிறேன்
 நான் அவன் கடைக்கு ஒருமுறை போயிருக்கிறேன்
 புத்தகங்கள் எதையும் என்னிடம் விற்கவில்லை
 என்னை புத்தகங்களோடு சேர்த்து
 நெருக்கித் தொட்ட இடம்
 ஞாபகத்திற்கு வருகிறது.
 சப்தத்தின் ஆழத்தில் நிசப்தமாய்
 முச்சந்தியில் காத்திருக்கிறது
 அவனது பழைய புத்தகக் கடை.

 



 




Comments