Skip to main content

யார் சமயத்துவம் கொண்ட மனிதன்

மார்டின் பட்லர்

சந்தோஷத்தைக் கொடுக்கும் பொருள் அல்லது நபரை நோக்கிய நமது உணர்வுதான் நேசம் என்பது. மகிழ்ச்சியைத் தருகிறார்கள் என்பதற்காகவே மனிதர்கள் பிறரை நேசிக்கிறார்கள்.

தத்துவ அறிஞர் ஸ்பினோஸா இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் உள்ளீடற்றதன்மை, வியர்த்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட மனிதன் நிலைத்ததும் நித்தியமானதுமான மகிழ்ச்சியை நாடுகிறான் என்கிறார்.

நாம், நம்மைக் கடப்பதைத் தான் தீர்வாகப் பரிந்துரைக்கிறார் ஸ்பினோஸா. நாம் பிறக்கிறோம்; தற்காலிகமான சந்தோஷங்கள், வலிகளை அனுபவிக்கிறோம்; வயதாகி, நோயுற்று இறந்துபோகிறோம். பெரும்பாலானவர்களின் வாழ்க்கை இப்படியாகத்தான் இருக்கிறது.

எளிய பயிற்சியிலிருந்து தொடங்கலாம். நமது உணர்வு இயல்பு, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நாம் அளிக்கும் எதிர்வினைகளைச் சற்று தள்ளி நின்று புரிந்துகொள்ளும் பயிற்சிதான் அது. தமது உணர்வு இயல்பின் மீது ஆளுமை செலுத்த முடியாத ஒரு நபர் அந்த உணர்வு இயல்பின் சிறைக்கைதி ஆகிவிடுகிறார் என்கிறார் ஸ்பினோஸா.

உணர்வுகளால் ஒருவர் தின்று செரிக்கப்படாமல், உணர்வுகளின் இயல்பைப் புரிந்துகொண்டு அவற்றை செரித்துக் கடக்கும் திறனை ஒருவர் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது உணர்வு இயற்கைக்கும் தமது புரிதலுக்கும் இடையில் வெளியைப் படைத்துவிடுகிறார். இது துவக்கம் மட்டுமே. பிறர், பிற விஷயங்கள் மீது சரியான கவனம், அறிவார்ந்த அணுகுமுறையைக் கையாள உதவும். தன்னிலை அடிப்படையிலான அனுபவத்துக்கு அப்பாற்பட்டு நமது நோக்கு, புரிதலை நீட்டிக்க தற்சார்பற்ற அறிதல் தேவையாக இருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழும் ஒட்டுமொத்த உயிர் இருப்பைப் புரிந்து ஏற்றுக்கொள்வதற்கு அதுவே உதவியாக இருக்கும்.

சந்தோஷத்தை அளிக்கும் விஷயத்தை மட்டுமே நாம் தொடர்ந்து பயிலமுடியும். நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிலையில் நமது புரிதலை நாம் நேசிக்கத் தொடங்கிவிடுவோம். நமது தற்காலிகமான, வலிமிகுந்த இருப்பு தொடர்பான அலைக்கழிப்புகளோடு மட்டுமே அடையாளம் காண்பது குறையும். நம்மை விட மகத்தான ஒன்றுடன் நாம் அடையாளம் காணத்தொடங்குகிறோம். மனித இருப்பு தொடர்பான ஒரு பார்வையும் கிடைக்கிறது. நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒரு கண்ணாடி போல பார்க்கத் தொடங்கி விடுவோம்.
நமது மொத்தக் கவனமும் நம்மில் குவியும்போது தாறுமாறான அதிர்ஷ்டத்தின் அம்புகளும் உண்டிவில் கற்களும் உங்களைத் தாக்கத் தொடங்கும். எந்தப் பெரிய முக்கியத்துவமுமற்ற நமது இருப்புக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் சந்தோஷத்தைக் காணலாம்; அப்போது மட்டுமே ஒரு அல்ப உயிருக்கு ஏற்படும் விதியின் அபாயங்களிலிருந்து சற்றாவது தப்பிக்க முடியும். இதைத்தான் ஐன்ஸ்டீன்.

நம்மால் அனுபவிக்கப்படக் கூடியதிலேயே அதிகபட்ச அழகுடன் கூடிய  உணர்வுநிலை என்பது பகுத்தறிவுக்கு எட்டாத வினோதம் கொண்டது. அதுதான் கலை, அறிவியலின் உண்மையான சக்தியும் கூட. யாருக்கு இந்த உணர்வுநிலை அன்னியமாக இருக்கிறதோ, யாருக்கு அதன் விந்தையுணர்வும் திகைப்பும் இல்லையோ, அவர்கள் இருந்தும் இறந்துபோனவர்களே. நம்மால் ஊடுருவ முடியாத ஒன்று இருக்கிறது என்பதை உணர்வதும் அதுவே உயர்ந்த ஞானமாகவும் அதுவே அற்புத வசீகரமாகவும் இருக்கிறது என்பதை அறியும்போது, நமது தற்போதைய அறிவைக் கொண்டு அதைப் புரிந்துகொள்ள இயலாது என்பதும் தெரியவரும். இந்த அறிவும், இந்த உணர்வும் தான் உண்மையான சமயத்தன்மையின் மையம்இந்த அடிப்படையில் மட்டுமே நான் சமயத்துவம் கொண்ட மனிதன்.

 (http://corporealfantasy.com இணையத்தளத்திலிருந்து)


Comments

Saravana Raja said…
அருமையான கட்டுரை ஐயா!

Popular posts from this blog

இது துயரம்தான் பழனிவேள்

காலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.
பழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில்,  திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது…

தேவதச்ச கணங்கள்

உலகிலேயேஅழகான உயிர்பொருள் நாய்வால்தான் அதற்குகண்இல்லை காதுஇல்லை ஒருஇதயத்திலிருந்துநீளும் துடிப்புஉண்டு மிகமிகமிக முக்கியமாக அதற்கு அன்பின்கோரைப்பற்களில் ஒன்றுகூடஇல்லை.
000

பொன்னூரிலிருந்து சிவப்பூர்செல்லும்வழியில் சதுப்புநிலநீர்நிலைகளை ஒளிரவைக்கிறான்மாலைச்சூரியன் நடைபயில்பவர்கள்காதலர்கள் ஸ்கேட்டிங்விளையாடும்குழந்தைகள் மிருதுவாக்கிய ஏகாந்தசாலையின் பக்கவாட்டில் பறக்கும்ரயில்கடந்துசெல்கிறது. காற்றில்ஆடிக்கொண்டிருக்கும் சிறுவேப்பமரங்கள் நாணல்கள் சரசரக்கும்புல் கன்னங்கரெலென்று ஒருசிறுகிளையில்

ப்ரவுனிக்குச் சில கவிதைகள்

பளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.
-ஒரு ஹைகூ கவிதை
ஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்
அழைக்கிறது எல்லையற்று விளையாட.
விளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை
விளையாடு