செம்மை
ஏறியிருந்த
அந்தச்
சாயங்காலம்
விரைவாக
அந்திக்கருமை
நோக்கி
சைதாப்பேட்டை
பாலத்தில்
விசுக்கென
போய்க்கொண்டிருந்தது
அதன்
செம்மையால்
கூடுதல்
சிவப்பாகியிருந்த
இரண்டு
செவலை நாய்கள்
பாலத்தின்
பக்கவாட்டு
நடைபாதையில்
அவற்றின்
ஓட்டத்திலேயே
சாயங்காலத்தைச்
சந்தித்தன
சிகப்புச்
சேலை அணிந்து
மார்க்கெட்டிலிருந்து
திரும்பி
எங்கள்
முன்னால் போகும்
நடுவயதுக்காரிதான்
எங்கள் எஜமானி
என்று
சாயங்காலத்திடம்
அறிமுகப்படுத்திக்
கொண்டன
அந்தியே நீ இப்போது சிவப்பு
கிழக்கும்
மேற்குமாக
எதன்பொருட்டும்
இல்லாமல்
பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்
நாய்கள்
சிவப்பு
அவை
தமது எஜமானி என்று கருதும்
அவளும் சிவப்பு.
Comments