ஆனால் கி.மு. 2000 இல் ஹரப்பாவில் வேலைக்காரப் பெண்ணை யார் வெண்கலத்தில் வார்த்தது? வீரர்கள், அடிமைகளின் ஆவணங்களை யாரும் பாதுகாத்து வைத்திருப்பதில்லை! பாகற்காயில் பெருங்காயத் தூளைப் புதுக்கி இறைச்சியைக் கிளறி தரையைத் துடைத்து சுவர்களைக் கழுவியதால் விடைத்த அவள் விரல்களின் வலிக்கு மெருகூட்ட வேண்டுமென்று சிற்பிக்குத் தெரிந்திருந்தது. வெண்கலத்தில் அவள் என்னைப் பார்த்து சிரிப்பது போல சிற்பியைப் பார்த்து சிரித்ததற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஒரு குழந்தை தனது எஜமானுக்கு பெரிய மனுஷியாக நடக்க வேண்டியிருந்தது ஜூன் மாதத்தில் ஹரப்பாவுக்கு வெதுவெதுப்பான மழை வந்தபோது.