![]() |
| ஓவியம்: நம்பூதிரி |
வைக்கம் முகம்மது பஷீரின்
நீலவெளிச்சம் கதையில்
கைவிடப்பட்ட மாளிகை ஒன்றில்
தங்கியிருக்கும்
பேயின் பெயர்
பார்கவி.
பேய்தான்
ஆனாலும் அவள் நல்லமாதிரி.
மாற்றிடத்துக்கு வாய்ப்பற்ற
கதைசொல்லி
பார்கவியுடன்
பழகத்தொடங்கி
எம்.எஸ். சுப்புலட்சுமியின்
பாடல்களை
எல்.பி ரெக்கார்டில் இசைத்து
நட்பும் கொண்டுவிடுவார்...
பாரதியின் கண்ணம்மா
நகுலனின் சுசீ
கலாப்ரியாவின் சசி
லா.ச.ரா. வின் அபி
சத்யஜித் ராயின் சாருலதா
க.நா.சு.வின் ஹேமா
பஷீரின் பார்கவி
எம்.டி.வியின் விமலா
எல்லாருமே
நல்லமாதிரி...
ஆனால்
அவர்கள் வேறு கோளத்தில் வசிப்பவர்கள் போல.
மிக நல்ல நல்ல.

Comments