Skip to main content

Posts

சிறந்த சமூகவியல் எழுத்துகள் அழகாக எழுதப்பட்டவை தான்- ஆ. இரா. வேங்கடாசலபதி

  காலனிய வரலாற்றாய்வாளர்கள் வட்டத்தில் இந்தியாவிலிருந்து மதிக்கப்படும் பெயர்களில் ஒன்று இவருடையது . பாரதியார் , வஉசி , புதுமைப்பித்தன் ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களை உருவாக்கியவர் . நவீன தமிழ் சமூக உருவாக்கம் குறித்து இவர் எழுதிய அந்தக் காலத்தில் காப்பி இல்லை கட்டுரைகள் ஆய்வுநுட்பத்தையும் தாண்டி புனைவு போல வாசிப்பதற்கும் சுவாரசியமானவை . சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய போது த சன்டே இந்தியனுக்காக எடுத்த நேர்காணல் இது ... 17 வயதிலேயே வ உசியின் கடிதங்களை பதிப்பித்துவிட்டீர்கள் ... பெரிய வாய்ப்புகள் இல்லாததாக கருதப்படும் வரலாற்று ஆய்வில் இத்தனை ஈடுபாடு வருவதற்கான காரணம் என்ன ? ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் சிறுவயதில் இருந்தது . ஆனால் அதை செய்யக்கூடிய எந்தவகை ஆற்றலும் என்னிடம் இல்லை . எதிலும் நான் முதன்மையாக இருந்தது இல்லை . அப்போதுதான் புத்தகவாசிப்பில் ஈடுபாடு வந்தது . ஆங்கிலப்படிப்பில் இருந்து தமிழ்படிப்பின் மேல் காதல் ஏற்பட்டது . நான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்ததால் பாடப்புத்தகங்களில் தமிழகத்தைப் பற்றி ஒரு செய்தியும் இருக்...

துக்கம் சுத்திகரிக்கப்பட்ட ஒரு கதை

ஷங்கர்ராமசுப்ரமணியன் கைவிடப்பட்ட வில்வண்டி ஒன்று என் சமீபத்திய நினைவுகளில் காட்சியாக வருகிறது அது சாய்ந்திருக்கும் கிழட்டுப் புளியமரமோ கால்களை விரித்த எலும்புக்கூடாய் தன் வேர்களை வெளிக்காட்டி நிற்கிறது ஏதேதோ காரணங்கள் இருந்திருக்கலாம் அது பயணிக்காமல் நின்றதற்கு . ஆரச்சக்கரங்களின் பெரும்பாதி மணலுக்குள் புதைந்து விட்டது அவை மூடிய நிலத்தின் மீது   புற்கள் தாவரங்கள் முளைத்து விட்டன . பருவமழையால் வண்டியின் மேல்பகுதி பச்சைப்பசேலென பாசிபடர்ந்து மின்னுகிறது வண்டிக்குக் கீழே உலர்ந்த சேறுபடிந்து தரையில் பதிந்துள்ளது ஒரு அரிக்கேன் விளக்கு . தெரியாமையின் இருள்மூடிய இரவுகளில் அந்த விளக்கு ஆடியபடி உரைத்த மர்மங்களை கழற்ற இயலாமல் போனானோ வண்டிக்காரன் .

விடியல் சிவா

தமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள...

கடலால் எங்களைப் பிரித்த தீவு

கடலால் எங்களைப் பிரித்த தீவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர தொடர பேச்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது . பொதுவாகப் பேசிக்கொள்ள ஏதுமற்ற எங்கள் வெறுமையூரில் , அந்தக் கொலைகளைப் பற்றி ஒரு திருவிழா போல் கூடிகூடிப் பேசினார்கள் . கொலைகளைப் பலகோணங்களில் இருந்தும் ஆராய்ந்து பேச வெளிநாடுகளிலிருந்தும் தாயகம் இறங்கி வந்து சிறிய அரங்குகளில் பேசினார்கள் . பெரிய மேடைகளில் ரத்தம் கொதிக்கப் பேசினார்கள் . பேரணிகளில் பேசினார்கள் . போராட்டங்களில் பேசினார்கள் . அனைவரின் கையாலாகாத்தனங்களையும் மறைப்பதில் ஆரம்பித்த பேச்சு ஒருவர் தரப்பை மற்றவர் புதைப்பதில் முனைப்பானது . பேசிப்பேசி இறந்த உடல்களை ஆழத்துக்குள் புதைத்தபடியே இருந்தனர் . அனைவரும் வேறு வேறு குரல்களில் பேசினார்கள் . பேச்சுகள் புத்தகங்களானது . பேச்சுகள் உடனடியாக விற்றுத்தீர்ந்தது . பேச்சுகள் திட்டநிரல்கள் ஆனது . ஆணும் பெண்ணும் ஊடல் கொள்வது போல் பேசிப்பேசி உன்மத்தம் ஏற்றினர் . மரணம் நேரும் புதிரும் , பலவீனமும் ஆன முடிச்சை அவர்கள் உணராமலேயே பேசிக்கொண்டிருந்தனர் . சிலர் இறந்தான் என்றனர் . சிலர் இறக்கவில்லை என்றனர் . இரண்டு தரப்பும் கதைகளைச் சந்தைய...

விசில்

ஷங்கர்ராமசுப்ரமணியன் ரிலீஸ் நாளன்றே சகுனி படத்திற்கு மாயாஜால் போயிருந்தேன் . வெள்ளிக்கிழமை மதியவேளை . படம் போடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் நானும் நண்பரும் நுழைந்துவிட்டோம் . அழைத்துப்போன நண்பர் அந்தப் பத்துநிமிடங்களைக் கூட மிச்சம் வைக்காமல் உடனடியாக விமானம் பிடித்து குறட்டையில் ஆழ்ந்துவிட்டார் . எங்களுக்குப் பின்வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளம் வந்து அமர்ந்தது . கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகியிருக்காது . உடன் பணிபுரியும் தோழியின் பிறந்தநாள் ட்ரீட்டுக்காக படம்பார்க்க வந்திருக்கிறார்கள் . தோழி , திரையரங்கத்தின் இருட்டிலும் நீலஉலோக நிறச் சேலையில் பளபளவென்று இருந்தார் . படம் போடுவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தது . கலாய்ப்பும் , உற்சாகமுமாக ஒருவரையொருவர் வாரிக்கொண்டிருந்தனர் . வார்த்தை நரி , உயர உயரக் குதித்தது உரையாடலில் . இன்னும் இரண்டு நிமிடங்கள் படம் போட இருந்தது . அது எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரியும் . அவர்களில் ஒரு பையன் ஒரு விசிலை அடித்தான் . ஒரு நண்பர் , இன்னும் டெம்போ வேணும்டா மாப்பிள என்றார் . இன்னும் சத்தம் கூடியது . என் நண்...