Skip to main content

Posts

ஆம் இவர்கள்

ஆம் இவர்கள் இன்னொரு கிரகத்தில் இருந்து வந்த பறவைகள் இவ்வுலகின் களங்கம் ஏறா கண்கள் எங்கோ மிதக்க ஏன் வெயிலில் பேருந்து நிறுத்தங்களில் புழுக்கம் கொண்ட சமையலறைகளில் அலுவலகங்களில்

முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்  முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தத்துக்குள் ரயில் நுழைகிறது ரயில் நிற்காத யாரும் ஏறாத இறங்காத ஸ்டேசன் அது. அங்கே இதுவரை காதலிக்கவில்லை குறுஞ்செய்திகளைப் பரிமாறவில்லை எதையோ தொலைத்துவிட்டு பிளாட்பாரத்தில் நின்று அழுததும் இல்லை யாரும் ஆனாலும் முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிலைய இருட்டை ரயில் சற்று மெதுவாகவே கடக்கிறது.

ஆஸ்கர் வைல்டை ரயிலில் படித்தபோது

ஆஸ்கர் வைல்டை ரயிலில் இருந்து படித்த போது, ஒரு கூற்றில் என்னை அவன் வெளியே எறிந்துவிட்டான். சூரியகாந்தி வயல்களில் இருந்து கிளிகள் பறந்தெழுந்தன. ஒரு புத்தகம் இப்படித்தான் ஒருவனை வெளியே விரட்டியடிக்க வேண்டும். பல யுகங்களாகப் பார்த்த மரங்கள் தான். அனைத்தும் புதிதாகத் தெரியத் தொடங்குகின்றன. பூக்கள் திருவிழா கோஷம் போடுகின்றன .  இயற்கைக்கு தன்னுணர்வுள்ள அழகோ, நீதியோ, மகிழ்ச்சியோ, முழுமையோ இல்லை. இயற்கைக்கு நான் வேண்டாம். எனக்குத் தான் அவர்கள் வேண்டும். இயற்கையோடு இணைந்து அதை அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் நானே மாற்றிக்கொள்கிறேன். அதை மறுபடைப்பு செய்கிறேன். நான்தான், நான் தான் காலம்காலமாக அதை மனிதாயப்படுத்தி என் கவிதையில், என் ஓவியத்தில், சிற்பங்களில், பாடல்களில், கதைகளில் இணைத்து அதற்கு ஒரு முழுமையைத் தருகிறேன்.

ஆயிரம் சந்தோஷ இலைகள்

நான் என் வீட்டு பால்கனியோர அரசமரம் என் மனம் காற்றிலும் ஒளியிலும் ஆடும் ஆயிரம் சந்தோஷ இலைகள்

நான்

என் தந்தையர் எனக்கு வழிவிட்டுப் போயினர். என் வீடும் நிலமும் விசாலம் கொண்டது துளியும் கவலை இன்றி பெயரோடு மகத்துவமும் சூடிய மலர்கள் காவியச்சாயல் ஏறாத புறக்கணிக்கப்பட்ட பூக்கள் மஞ்சளும் சிகப்புமாக குப்பைமேடுகள் சிதில வீடுகள், பாலங்களில் பூத்துச் சிரிக்கின்றன. என் குழந்தைகள் அந்தப் பூக்களைப் போல இந்த உலகை துல்லியமாக விடுதலையுடன் பார்க்க நான் அதே சிரிப்புடன் இங்கிருந்து நீங்கத்தான் வேண்டும்.

ஆப்பிள் பாபா வாணி

வாணி ஊருக்குப் போயிருந்தாள் வியாழக்கிழமை இரவன்று தவறாமல் சாய்பாபாவுக்கு ஆப்பிளைப் படைக்கச் சொல்லியிருந்தாள் நான் அந்த நாள் முழுவதும் பாபாவையும் வாணியையும் ஆப்பிளையும் நினைவில் வைத்திருந்தேன் இரவில் வீடு திரும்பி குளிர்சாதனப் பெட்டியைத்  திறந்தேன் ஆப்பிளை எடுத்து பூஜையறையில் சாய்பாபாவுக்கு வைத்தேன். ஆப்பிள் வியர்ததது தீபச்சுடர் ஒளியில் பாபாவின் முகத்தைப் பார்த்தேன் அவர் முகத்தில் வருத்தம் எனக்கும்தான்.

நொறுங்கிக் கொண்டேயிருக்கும் காதலன்- அம்பிகாபதி

ஷங்கர்ராமசுப்ரமணியன் பஞ்சாபில் நிலவும் துயரக் காதல் கதையான ஹீர்-ராஞ்சாவை, காசியின் களத்தில் வைத்து தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கதைதான் ராஞ்சனா. அதுதான் தமிழில், இன்னொரு காவியக் கதாபாத்திரத்தின் பெயரோடு அம்பிகாபதியாக வெளியாகியுள்ளது. இந்தியில் ராஞ்சனா வெளியாகி நல்ல வர்த்தக வெற்றியையும், தனுஷூக்கு நல்லபெயரையும் பெற்றுத் தந்துள்ளது. ராஞ்சனா ஒருவகையில் இந்தி சினிமா உலகையும், ஆங்கிலப் பத்திரிக்கையுலகையும் ஒருவகை ‘அதிர்ச்சிக்கு ’ உள்ளாக்கியுள்ளதையும் அந்த எழுத்துகளின் வழியில் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னொரு வகையிலும் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. காதல் தவிர வேறெந்த ஈடுபாடுகளும் லட்சியமும் இல்லாமல் தீவிரமான வன்முறையால், வன்முறை வழி அன்பால் காதலியை வென்றெடுக்க முயலும், அதற்காக எல்லா அழிவுகளையும், குரூரங்களையும், நிகழ்த்தும் தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமான நாயகன் இந்திய சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறான். அந்த நாயகனை முழுமையாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அந்த நாயகன் சரியான முறையில் பொருந்தக்கூடிய   உருவாக நடிகர் தனுஷ் ; ஒரே கதாபாத்திரத்தை தமிழில் பல படங்களில்...