அந்த பெட்டிதான் என்னை வீட்டிலிருந்தும் அறைகளிலிருந்தும் துரத்தியதென்பதை நான் முதலில் அறியவில்லை. 18 வயதில் எனது அப்பாவை தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய போது என்னுடன் அந்தப் பெட்டியின் பயணம் தொடங்கியது. கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது என் அறையிலிருந்த அந்த பெட்டி சாலையில் தூக்கி எறியப்பட்டது. அதன் பின்பும் நான் அந்தப்பெட்டியுடனேயே அடைக்கலம் தேடி பல்வேறு ஊர்களுக்கிடையே அலைந்திருக்கிறேன். ஒரு இடத்திலும் நிம்மதியாக நீண்டகாலம் நிலைத்திருக்க முடிந்ததில்லை. எனக்கு முன்பாகவே பெட்டி அங்கிருந்து வெளியேறக் காத்திருக்கும் போலும். நான் பெட்டியுடன் வெளியேறும் போதெல்லாம் உடல் வலிக்கும். ஒரு நிராதரவின் சுமையுடன் அப்பெட்டி அகால இரவுகளில் என் கையில் கனத்திருக்கிறது. எனது உடைந்த நினைவுகள் பரிசுகள் நட்புகள் சந்தர்ப்பங்கள் அனைத்தின் சுவடுகளும் கடிதங்களும் புகைப்படங்களும் அந்தப் பெட்டியில் உண்டு. அந்தப் பெட்டியின் மேல்மூடி விளிம்பு தேய்ந்து உடையவும் தொடங்கியிருந்தது. சாலமன் கிரண்டியைப் போல புதன்கிழமை எனக்கு திருமணமானது. வெள்ளிக்கிழமை உறவில் விரிசல் ஏற்பட்டது. திரும்பவும் எனது பெட்டியுடன் வெளியில் வலியுடன் சுற்றத்தொடங்கினேன். அதில் என் குட்டி மகளின் உடைகள் ஞாபகத்தில் சேர்ந்திருந்தன. அப்போது தான் பெட்டி மிகவும் கனக்க தொடங்கியதை உணர்ந்தேன். ஒரு அறைக்கு கொண்டு சென்று வைத்தபின்பும் நான் போகும் வெவ்வெறு அறைகளில் அந்தப் பெட்டி எனக்கு முன்பே தென்படத் தொடங்கியது. இந்தப் பெட்டியுடனான எனது அசட்டு உறவை எனது நண்பனிடம் ஒரு இரவில் கதைபோல் சொல்லத் தொடங்கினேன். எனது துயரம் அனைத்துக்கும் இந்தப் பெட்டியுடன் தொடர்புடையது என்றான். அப்போது அவனது சொல் மந்திரம் போல் இருந்தது. ஒரு மனிதனை சிதைத்துக் கொல்வது போல அந்தப்பெட்டியை காலால் மிதித்து நொறுக்கினோம். ஒரு உடலைக் கிழிப்பது போல கிழித்தோம். என் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது. இருந்தும் வெறியுடன் அந்தப் பெட்டியை துவம்சம் செய்தேன். முஷ்டிக்காயத்தில் ரத்தம் பொழிய ஒரு குழந்தைபோல பெட்டியை சுமந்தேன். கட்டிடத்தின் உச்சிக்கு சென்று பெட்டியைத் தூக்கி வீசியெறிந்தோம். எனது சட்டையில் ரத்தச்சுவடுகள் இருந்தன. அந்தப் பெட்டியுடன்..... எனது பதினேழு வருடங்கள்.
கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது. இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந
Comments
visaran.blogspot.com
நன்றி