Skip to main content

நான்


ஷங்கர்ராமசுப்ரமணியன்

பம்பரக்கூர்மை
பசிய சிறு
தென்னங்குரும்பை
கையில்
தொடும்போது
நான் ஏன் சிறுவன்?

கருவேப்பிலை
சிறு மரக்கிளை
அப்பொழுது தான்
வந்தமர்ந்த
குயில்
ஆடும்போது
நான் ஏன் பறவை?


Comments