ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஆற்றுப்படுத்துவதற்கு எல்லாரும்
இருப்பதால்
அழுகிறாயா பாப்பா
பருப்பும் நெய்சோறும்
அடுத்து தயிரமுதும் இருப்பதால்
பிடிவாதமாய் மறுத்து
சிணுங்குகிறாயா பாப்பா
உன்னால்தான்
உன் உயிரழுகையின்
ஒலியால்தான்
இந்த உலகம் திரும்பத் திரும்ப
உயிர்க்கிறதென்பதை
ஞாபகப்படுத்துவதற்கு
திரும்பத் திரும்ப
அழுகிறாயா பாப்பா
Comments