ஒளிரும் பச்சை இலை
காம்புகளில்
காம்புகளில்
நின்று
செம்போத்துப் பறவை
தளிர்களை
இடையறாமல் கொத்த
மரம் வசந்தத்தின்
ஒளியில் குளிப்பதாய்
நேற்று ஒரு கனவு.
000
உன் உதட்டிலிருந்து
அவள் இதழுக்கு
நீ சாக்லேட் திரவத்தை
இடம் மாற்றும்போது
என்றுமில்லாத நடன அசைவில்
அவள் உடைகளை
சுழன்று களையும்போது
தாதிக்கும், தாய்க்கும் பிறகு
யாருமே தீண்டாத உன்
காதுமடலை
அவள் பற்றிக் கடிக்கும்போது
உன் வீட்டின் சிறுமரத்தினடியில்
கொம்புள்ள சில வரிக்குதிரைகள்
மேய்ந்து கொண்டிருந்தன.
Comments