Skip to main content

Posts

Showing posts from June, 2022

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா ம...

ஏ கே ராமானுஜனின் வைகை, பழைய வைகை

  மதுரை    கோரிப்பாளையம் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் கீழே பெரும்பாலும் பழம்குப்பைகள், புதர்கள் சூழ்ந்த வெம்பரப்பாய் பெரும்பாலும்   வைகை நதியை பகலிலும் இரவிலும் கனவுகாணும் மணல்பரப்பில், பரட்டையாய் சோனியாய் ஒரு மட்டக்குதிரை மேய்ந்து கொண்டிருப்பதை அந்தப் பாலத்தை பேருந்திலோ நடந்தோ கடப்பவர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள். தேசலாக, கந்தலாக, தன் கம்பீரத்தை மறந்ததாகத் தெரியும் அந்த மட்டக்குதிரை, ஒரு தோல்வியைப் போல, ஒரு வீழ்ச்சியைப் போல, ஒரு சிதிலத்தைப் போல, ஒரு சிதைவைப் போல வைகைப் பாலத்தின் கீழே உள்ள மணல்பரப்பின் நடுவில் உள்ள மண்டபத்தை அச்சாக வைத்து மேய்ந்து கொண்டிருக்கிறது. அது எப்போது வந்து அங்கே இறங்கியதென்று தெரியவில்லை. எங்கிருந்து அந்தக் குதிரை இந்த இடத்துக்கு வருகிறது. திருவிளையாடற் புராணத்தின் காலத்திலிருந்து ஒரு குதிரை இப்படியாகி, கோரிப்பாளையத்திலிருக்கும் வைகை நதி செல்லும் வறண்ட பரப்புக்கு வருவது தொடர்ந்திருக்க வேண்டும். அப்படியென்றால் ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்குக் கீழே எத்தனை குதிரைகள் இப்படி வந்திருக்கும். இப்போது அந்தக் குதிரை மேய்ந்துகொண்டிருக்கிறதா...

மலைச்சாமியின் ‘அத்துவான வெயில்’

சென்னையின் வெயில் வேறு; தெற்கத்திப் பகுதியில் குறிப்பாக வெங்கரிசல் என்று சொல்லப்படும் பகுதியில் அடிக்கும் வெயில் வேறு.  இருப்பைப் பதங்கமாக்கிவிடக் கூடிய வெயில் அது. அதனால்தான் கரிசல் எழுத்தாளர்களின் படைப்புகளில் வெயில் என்பது தொடர் படிமமாக உள்ளது. கவிஞர் தேவதச்சன் அந்த வெயிலின் உச்சிப்பொழுதை மத் தியானம் என்று அதன் கனம் துலங்க நீட்டுகிறார். அந்தப் பொழுதைத் தான் அவர் அத்துவான வேளையாக மாற்றுவிடுகிறார். சுயம்புலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன் முதல் கைலாஷ் சிவன் வரை வர்ணிக்கும் வெயில் தனித்த வெயில். மார்க்வெஸின் மக்காந்தோவில் அடிக்கும் வெயிலைப் போல, தனி நிலப்பரப்பாக, ஒரு அகப்பரப்பாக தனியாக அந்த வெயில் தனிக்குணரூபத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது.   ‘ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ கவிதைத் தொகுதியில் மலைச்சாமியின் ‘வெயில்’ இப்படி அடிக்கிறது. உயிர்கள், வஸ்துக்களைத் தொடும் அதேவேளையில் தொடாமலும் அந்த அத்துவான வெயில் மயக்கி அடித்துக் கொண்டே இருக்கிறது அங்கு. எது நிறம் வெயில் வெளுப்போ நெருப்போ சொல்லழிந்த மத்யானம் வாழையடி வாழைத் தோப்பில் நிழலும் அடியும் அகங்களித்து வளர்ந...

நகுலனின் ‘ஒரு நாள்’

(நகுலனின் ஒரு நாள் சிறுகதையைப் படிக்க  https://www.shankarwritings.com/2022/06/blog-post_23.html  ) ந குலனின் உலகத்தில் தனியான கதை என்று சொல்லத்தகுந்ததும், தமிழ் சிறுகதைப் பரப்புக்கு வெளியே இன்னமும் புதியதாகத் தொனிக்கும் சிறுகதை ‘ஒரு நாள்’. சி. சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து, 1959’ இதழில் வெளிவந்திருந்தாலும் திரும்பத் திரும்பச் சொல்லி தேர்ந்த வாசகர்களைப் படிக்கத்தூண்டும் சிறந்த சிறுகதைகள் பட்டியலிலோ, விமர்சகர்களின் குறிப்புகளிலோ கூட இந்தச் சிறுகதை இடம்பெறவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நகுலனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் விமர்சகருமான ப. கிருஷ்ணசாமி இந்தக் கதை பற்றி ‘நகுலன் கதைகள்’ தொகுப்பின் முன்னுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்காவிட்டால் நானும் இந்தக் கதையை அடைந்திருக்க மாட்டேன். சராசரி அன்றாடத்தின் நெடிய விவரங்கள், சத்தான கதை அம்சம், தெளிவான துவக்கம், முடிவு என சம்பிரதாயச் சிறுகதை ‘உலகியலில்’ வேர்கொண்ட கதை ‘ஒரு நாள்’. ராமகிருஷ்ண பரமஹம்சரின் உலகியல் பார்வையை அவரது ஒரு நாள் வாழ்க்கையிலிருந்து விண்டுகாட்டும் ‘வித்தியாசமான’ கதையும் கூட. பிரம்ம சமாஜ காலத்திய க...

மாணிக்கவாசகர், பட்டினத்தார், எம். வி. வெங்கட்ராம் எனத் தொடரும் அச்சத்தின் யாத்திரை

எம். வி. வெங்கட்ராம் ‘உயிரின் யாத்திரை’ என்ற நெடுங்கதை பற்றி வே. நி. சூர்யா தான் எனக்குச் சொன்னார். உடனே வாங்கிப் படித்துவிடுவதற்கான தூண்டுதலை சூர்யாவின் பேச்சு எனக்கு அளித்தது. நித்யகன்னி, காதுகள் அளவுக்குச் செறிவான படைப்பு அல்ல ‘உயிரின் யாத்திரை’. ஆனால், எம். வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள் நாவல் நிகழும் உலகத்துக்கு மிக நெருக்கமானது ‘உயிரின் யாத்திரை’. பெண் என்னும் மாயையிலிருந்து விடுதலை அடைந்து, சதாசிவத்தை அடையும் மிகப் பழைய உள்ளடக்கத்தை, பழைய உள்ளடக்கம் என்று தெரிந்தே எம். வி. வெங்கட்ராம் தைரியமாக, காதுகள் நாவலைப் போலவே கையாண்டுள்ளார். இந்த அறிவு யுகத்துக்கு ஒவ்வாத கதை என்ற விமர்சனத்துக்கும் அவரே, அறிவுக்கு வரம்பு உண்டா? என்று பதிலையும் முன்னுரையில் சொல்லிவிடுகிறார். மறுபிறவி, கடவுள்களின் லீலைகள், அற்புதங்கள் எல்லாம் நடக்கின்றன ‘உயிரின் யாத்திரை’யில்.    காதுகள் அளவு விபரீத, பயங்கரத் தன்மை இந்த நாவலில் கிடையாது. ஆனந்த விகடன், அமுதசுரபியில் புழங்கிய அக்காலத்து மொழிதான் என்றாலும், படிப்பதற்கு சுவாரசியமானது.   காதுகள் நாவலின் நாயகன் மகாலிங்கத்துக்கு நேர்ந்ததை, அவன...

யவனிகா ஸ்ரீராம் - உலகின் எந்த மூலையிலிருந்தும் இனம்காணக்கூடிய குடியானவனின் கவிதைக்குரல்

  சமீபத்தில் கனடாவிலிருந்து சென்னைக்கு வந்திருந்த நண்பர் ஒருவரின் மகளைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு பேரும் வளர்ப்பு நாயை வைத்திருப்பவர்கள் என்பதால் முதல் சந்திப்பிலேயே எங்கள் பரிச்சயம் திடம் கொண்டுவிட்டது. அவருக்கு எனது வளர்ப்பு நாய் ப்ரவுனியின் புகைப்படத்தை செல்போனில் காட்டினேன். அவர் தனது செல்போனைத் திறந்து, கனடாவில் உள்ள தனது இல்லத்தில் தற்போது அது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை நேரடியாகக் காட்டினார். அந்த நாய்க்குட்டி, கனடாவில் உள்ள ஒரு அழகிய வீட்டின் அறையில் மெதுவாக நடைபோட்டு ஜன்னலில் ஏறி சட்டகத்தில் முன்கால்களை வைத்து யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு நின்றது. எனது நண்பரின் மகள், தன் வரவுக்காக அது காத்திருப்பதாகச் சொன்னார். கனடாவில் உள்ள ஒரு வீட்டில் இருக்கும் நாயின் பகல் பொழுதை இந்தியாவில் எனது நேரத்திலிருந்து, ஒரு அடிகூட தொலைவு மாறாமல் நெருங்கிப் பார்ப்பது எனக்கு மிகுந்த அதிசய உணர்ச்சியை அளித்தது. நான் நெருங்கும் போது அதன் மீது அணு அளவும் தாக்கம் ஏற்படாமல், அதன் உள்ளடக்கத்தில், அதன் அனுபவத்தில் எந்தப் பண்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், என்னால் தூர தொலைவி...