Skip to main content

Posts

தீராக்காதல் - 2

ஷங்கர்ராமசுப்ரமணியன் நதி நீந்திக் கரை சேர்ந்தபின் உன் கரம் கோர்த்தேன் ஸ்பரிசத்தில் பாதை சுழல பாழ்மண்டபம் வந்து சேர்ந்தோம் நீ என் பாதம் தொட்டு முத்தமிட காலம் அற்றுப்போனது மண்டபத்தின் கருவறை. உன்னுடன் உள் நுழைகையில் சாரலின் பின் பூத்த மலரென்றானேன் கூரை உச்சியில் துயின்றது போல் நின்ற மயில் நாம் வெளியேறும் வரை நீங்கவேயில்லை நினைவுகள் புராதனமாகி சட்டென்று விழித்தோம் ஒரு கருக்கல் மாலையில் வௌவால்களின் எச்சம் கழுவி கரைகடந்து பீதிபரவ வீடு வந்து சேர்ந்தேன் நரைபடர்ந்து சாய்வுநாற்காலியில் உடல் சாய்ந்திருந்தான் அவன்.

தீராக்காதல்

ஷங்கர்ராமசுப்ரமணியன் உன் இசையில் வனம் அதிர்கையில் பசுக்களுடன் அருவியின் பின்னணியில் குழலோசை கேட்டவள் நான் மரங்கள் சூழ்ந்திருக்கும் என் வீட்டில் பகல் ஒளி படரும்போது சில நாட்களில் என் அம்மா சொல்வாள் நீ வரக்கூடும் என்று உன் நீலமேனி அழகையும் உன் குறும்புகளையும் பிராயத்தில் கதையாய் சொன்னவள் அவள் தோழிகளுடன் உற்சவம் முடிந்து திரும்புகையில் தெருமுனையில் உன்னை விளையாட்டு தோழனென அடையாளம் கண்டேன் கூட்டத்திற்குள் விரைந்துவிட்டாய் ரவிக்கை அணிந்த வயதில் மார்கழிக் குளிர் பொதிந்த ஆற்றில் மூழ்கிக் குளிக்கையில் மரணபயம் அற்றுப்போனது மறுகரையில் நின்று என்னை அழைத்து செல்வாயென உன்னைப் பற்றி என் அம்மா சொன்ன கதைகளைத் தொடர்கிறேன் நானும் கிருஷ்ணா நம் நந்தவனங்கள் கடலில் அமிழ்ந்துவிட்டன. (மிதக்கும் இருக்கைகளின் நகரம்-2001 தொகுதியிலிருந்து)

பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி

ஷங்கர்ராமசுப்ரமணியன்   தமிழ் சினிமாவில் நடக்கும் மரணங்களும் , கொலைகளும் எதார்த்த வாழ்வில் நிகழும் மரணநிகழ்வை நோக்கி    நெருங்கிச் செல்கிறதோ என்ற உணர்வு சமீபத்திய படங்களைப் பார்க்கும் போது வலுப்பட்டு வருகிறது . சிறுவயதிலிருந்து சினிமாவில் நடக்கும் சண்டைக்காட்சிகளையும் , துப்பாக்கி மோதல்களையும் ரசித்து , அதனால் தற்காலிகமாக உணரும் உற்சாகத்தையும் ஆற்றலையும், சாகசபாவத்தையும் சில நாட்க ளாவது உடலில் அனுபவிப்பவன் நான். திரைப்படத்தில் வரும் காதல் மற்றும் சல்லாபக் காட்சிக ளுக்கு இருக்கும் முக்கியத்துவம் , துப்பாக்கி முழக்கங்களுக்கும் உண்டு என்று நான் நம்புகிறேன். சினிமாக் கதைக்குள் நடக்கும் துப்பாக்கி வெடிப்புகளும் , துரத்தல் காட்சிகளும் , நேரடியாக மோதும் ச ண்டைக் காட்சிகளும் , பார்வையாளனின் எதார்த்தத்துக்குள் நேரடியான , ஒற்றைப்படையான விளைவை ஏற்படுத்துவதில்லை. அது பார்வையாளனுக்கு , நடைமுறை வாழ்க்கை சுமத்தியிருக்கும் உடல்-மன இறுக்கத்தை தளர்த்தி , அவனை மாயக்கனவு வெளியில் விடுவிக்கவே செய்கிறது.    சினிமாவில் நடக்கும் போலீஸ் என்கவுண் டர் காட்சிகள் கூட , எதார...

மழை

 ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு கொடும் வெயில் நாள் தன் முடிவில் மழையால் கனிவது ஒரு முரண்நகை சற்று அபத்தம். இந்த நீண்ட கோடையின் கோராமை தாங்காது சற்றுமுன் தற்கொலை செய்தவனின் உடலை மழை நனைக்கிறது நீ வெயில்கால வீட்டிலேயே இருப்பதாகவும் நான் மழைக்கால வீட்டிற்கு நகர்ந்திருப்பதாகவும் நினைப்பது ஒரு தோற்றம் தான் உடை விலகும் அச்சமின்றி நீ கைகளை உயர்த்தி சுதந்திரமாய் கூந்தலை அள்ளி முடிக்கலாம் என் காமம் அடக்கம் கொண்ட மேட்டை சுற்றிச் சிரிக்கிறது இந்த மழை மூடிய இலைகள் அதன் தொலைவு இன்று விற்காமல் போன பழரசப் பாத்திரம் மழையில் நனைய ஈரம் சொட்ட சொட்ட வீடு திரும்பும் அவன் நானாகவும் இருக்கலாம்.  (அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் தொகுப்பிலிருந்து)