ஷங்கர்ராமசுப்ரமணியன்
நதி நீந்திக் கரை
சேர்ந்தபின்
உன் கரம் கோர்த்தேன்
ஸ்பரிசத்தில்
பாதை சுழல
பாழ்மண்டபம் வந்து
சேர்ந்தோம்
நீ என் பாதம் தொட்டு
முத்தமிட
காலம் அற்றுப்போனது
மண்டபத்தின்
கருவறை.
உன்னுடன் உள்
நுழைகையில்
சாரலின் பின் பூத்த
மலரென்றானேன்
கூரை உச்சியில்
துயின்றது போல் நின்ற
மயில்
நாம் வெளியேறும் வரை
நீங்கவேயில்லை
நினைவுகள் புராதனமாகி
சட்டென்று விழித்தோம்
ஒரு கருக்கல்
மாலையில்
வௌவால்களின் எச்சம்
கழுவி
கரைகடந்து
பீதிபரவ வீடு வந்து
சேர்ந்தேன்
நரைபடர்ந்து
சாய்வுநாற்காலியில்
உடல்
சாய்ந்திருந்தான் அவன்.
Comments