Skip to main content

Posts

அது ஒரு குறைகணம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்                 ஓவியம்: வினுபவித்ரா உன் குஞ்சுகளை உனது சிறகுகளுக்குள் இயல்பாக அரவணைத்து அள்ளிக்கொள்ளும் பொழுதில் உயிரும் அன்பும் கலந்த அமிழ்தை ஒரு கணம் பருகுகிறாய் மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் திருக்குறளையும் சேர்த்து சுவைக்கிறாய் அது ஒரு குறைகணம் குழந்தைகளின் மென்சிறகுகளை கோதியபடியே உன் கற்பனை மெல்லக் கலங்குகிறது உனக்கும் எல்லாருக்கும் நிச்சயமாகக் காத்திருக்கும் மரணத்தை மனதில் ஒத்திகை செய்யத் தொடங்குகிறாய் நீ நான்  என்ற இருப்பின் கசப்பு இதுதான்.

பராகா- மனித மீட்சிக்கான ஆசீர்வாதம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் பராக்கா என்னும் இந்தத் திரைப்ப டம் கதைப்படம் அல்ல. விவரணைகளும் இப்படத்தில் கிடையாது. மனதை உலுக்கும், நெகிழ்த்தும், சில சமயங்களில் ஓலமிடும் பின்னணி இசை மட்டுமே. இந்த இசையின் பின்னணியில் உலகம் முழுக்க பல்வேறு நிலக்காட்சிகள் நம்முன் விரிகின்றன. பெரும் இரைச்சலோடு விழும் பிரமாண்ட அருவியின் காட்சி, கடல் அலைகள் அறையும் பாறைகள், புராதன ஆலயங்கள், துறவிகள், பறவைகள், விலங்குகள், உலகெங்கும் உள்ள மரபான சமயச் சடங்குகளின் காட்சிகள் அழகாக அடுக்கப்பட்டுள்ளன.  மலைச்சிகர மடிப்புகளுக்குள் உள்ள ஒரு வெந்நீர் ஊற்றில் தியான நிலை போல கண்ணை இமைத்து மூடி, உலகத்தை அசைபோடும் குரங்கின் தனிமைக்காட்சி ஒன்றுபோதும் இப்படத்தின் தன்மையை உணர்வதற்கு.   எல்லாம் வேகமயமாகவும், எந்திர மயமாகவும் மாறிவட்ட உலகில் இன்றைய மனித வாழ்க்கை சந்திக்கும் நெருக்கடிகளை வேகமான காட்சிகளாக ஓடவிட்டு நாம் கடந்து கொண்டிருக்கும் பயங்கரம் காட்டப்படுகிறது. ஆஸ்விட்ச் வதைமுகாமில் அடுக்கப்பட்டிருக்கும் கபாலங்கள் நமக்கு பெரும் குற்றவுணர்வைத் தூண்டுகின்றன.  ஒரேமாதிரியாகத் தயாராகும் கோழிக்குஞ்சுகளின்...

சிரிக்கிறார் நகுலன்

ஷங்கர்ராமசுப்ரமணியன்         ஓவியம்: நரேந்திரன், புனைகளம் இதழின் பின்னட்டை என்னுடைய புத்தக அலமாரியில் தான் வேறெங்கும் போக வாய்ப்பில்லை இருப்பினும் நகுலன் மறைந்து கொண்டார் ‘லிங்கப் பிரதிஷ்டை குகை ஞானம் ’ என்ற வார்த்தை மனதைப் படுத்தியெடுக்க தூக்கம் வராமல் புத்தகங்களுக்குள் புதைந்து தேடினேன் வெகுநேரத்திற்குப் பிறகு ‘உட்சென்று வெளியிலவுமொறு வித்தையாக ’ கீழ் அடுக்கில்   செக்கச்சிவப்பாக முதுகைத் திருப்பி அலமாரியில் கிடந்தார் நகுலன். கிடைத்த பின் சிரிக்கிறார் நகுலன் என்றும் நீ தான் என் காதலன் என்றேன் பத்திரம் பத்திரம் என்று சொல்லி சிரிசிரியென்று சிரிக்கிறார் நகுலன்

யவனிகா ஸ்ரீராமின் தலைமறைவுக் காலம் - மனமே உடலாக

ஷங்கர்ராமசுப்ரமணியன் யவனிகா ஸ்ரீராமின் முதல் தொகுப்பான ‘இரவு என்பது உறங்க அல்ல ’ தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்த காலத்திலிருந்தே இவனது கவிதைகள் எங்கேயிருந்து தோற்றம் கொள்கின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. யவனிகா ஸ்ரீராமை சீரியசாக வாசிப்பவர்கள் எல்லாருக்கும் எழும் பொதுவினாவாகவும் இக்கேள்வி இருத்தல் கூடும். அதுதான் யவனிகா நவீன கவிதையில் உருவாக்கிய இடையீடு என்றும் கருதுகிறேன்.  யவனிகாவின் கவிதை போர்ஹே உருவாக்காமல் போன கற்பனை விலங்குகளின் உடலை ஒத்தனவாக இருக்கின்றன. பல கலாச்சார அடையாளத்தை சுமக்கும் உறுப்புகள் ஒட்டிப் பிறந்த, உலகளாவியத் தன்மை  கொண்ட உயிர்கள் அவை. சீரற்ற உடல், தீர்ந்த காமம், தொலைந்த பூர்வநினைவுகளை கந்தல்பையாய் சோகத்துடன் சுமந்து திரியும் மூன்றாம் உலகைச் சேர்ந்த அரசியல் உயிரியின் நாடோடிப் பாடல் என்று யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளை அடையாளம் காணலாம்.  யவனிகாவின் கவிதைகள் தமிழ் புதுக்கவிதை மரபில் உருவானவை அல்ல. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்கள், அபுனைவுகள், கல்கி, சுஜாதா போன்றவர்களின் எழுத்துகள், 90-களில் நடந்த கோட்பாட்டு விவாதங்களைய...

ஆத்மாநாம் நினைவுதினக் கட்டுரை

சூரியனைத் தொட முயன்ற வண்ணத்துப்பூச்சி ஷங்கர்ராமசுப்ரமணியன்                        கோட்டுச்சித்திரம் :   ஆதிமூலம் ஆத்மாநாம் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகப்போகிறது . நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் அனுபவப்பரப்பை உட்கொண்ட படைப்புலகம் அல்ல அவருடையது . 33 வயதில் அகாலமாக மரணமடைந்த ஒரு கவிஞனிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது . ஆனால் ,  தான் முற்றுமுழுக்க ஒரு கவிஞன் என்ற ஓர்மையோடு , தனது பிரதான வெளிப்பாட்டு வடிவாக ஏற்றுக்கொண்ட ஒரு ஆளுமையின் வெற்றிகளும் தோல்விகளுமாக 147 கவிதைகள் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன . பழந்தமிழ் இலக்கிய மரபின் தளைகளோ , செல்வாக்கோ அவர் கவிதைகளில் இல்லை.     உலகம் முழுக்க அவர் காலகட்டத்தில் நடைபெற்ற அரசியல் மற்றும் கலை இயக்கங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எதிர்வினைகளும் ஆற்றியிருக்கிறார் . அவரது மொழிபெயர்ப்புகள் , சிற்றிதழ் செயல்பாடுகள் மற்றும் நட்புறவுகள் மூலம் அவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது . இந்திய நிலத்தில் கால்பதித்திருந்த ...