Skip to main content

ஆனந்தா 2.0


ஷங்கர்ராமசுப்ரமணியன்

பிரமாண்டமான 
ஒரு
பச்சை முட்டையைக் கொத்தி
வெளியே வருவதைப் போல
கழுத்தைச் சிலுப்பி
மரத்திற்குள்ளிருந்து
கிளைகள் நடுங்க வந்து நிற்கிறது
வெள்ளைக் கொக்கு
அது
இருட்டில்தான் ஜனித்தது
தெரியாத தெய்வத்தின் கரங்களை நம்பி    
அது
காத்திருந்தது
அதுதான்
தற்போது தன் ஒளிப்பூக்கொண்டையைச் சிலுப்பி
கண்கள் பறிக்க
உயிர்கோஷம் இடுகிறது
ஆனந்தா.

Comments