ஷங்கர்ராமசுப்ரமணியன்
நள்ளென் றன்றே யாமம்
சொல்லவிந்து சடலங்களாய்
பேருந்தில்
உடல்சுருட்டியடங்கினர் மக்கள்
இருட்டில் முனகும் சல்லாபப் பாடல்கள்
உதிர்ந்து வரும் திருவள்ளுவர் சித்திரம்
பொன்மொழிகள்
அதிகாலையில் இறங்கவிருக்கும் நகரம் குறித்த நினைவு
எதுவுமல்ல
ஆம்
உண்மைதான் பதுமனார் அவர்களே
பற்றித் தள்ளும் விருப்பும் வெறுப்பும்
அலைக்கழிப்புகளும் அல்ல
உறக்கமும் பனியும் தான்
அவர்களைத் தாயென கதகதப்பாக
தற்காலிகமாகப் போர்த்தியிருக்கிறது.
Comments