Saturday, 19 August 2017

அந்தக் காகத்தின் பெயர் ஷங்கர்


இன்னொரு முனை கட்டப்பட்டிருப்பது
தெரியாது
அறுந்த கொடிக்கம்பியைக்
கவ்விச் செல்ல முடியாது
தன் அலகாலே சிறைப்பட்டு
பதைத்துத் திணறி
ஊஞ்சலாடி
பின்னர்
விட்டு விடுதலையாகி
பறந்து சென்ற 
காகத்தை நேற்று பார்த்தேன்
அந்த க்ஷணத்திற்கு
அந்தக் காகத்திற்கு
அந்தச் சம்பவத்துக்கு
ஷங்கர் என்று பெயரிடுகிறேன்.

No comments:

அம்மாவைத் தனியே விட்டுவிட்டு விளையாடப் போய்விடாதீர்கள்

எப்போதும் போல் தனியே நடந்து சென்று கொண்டிருந்த சாப்ளினுக்கு கடவுள் அதிசயம் ஒன்றை நிகழ்த்தினார். சாப்ளின் நடக்க நடக்க  வரிசையாய் வீடுகள...