Skip to main content

Posts

Showing posts from October, 2017

தாமிரபரணி நால்வரின் இலக்கியச் சாதனை

மறுகரை தெரியாமல், பிழைப்போமா என்று அறியாமல் கலைநம்பிக்கை என்னும் சமுத்திரத்தில் குதித்துப் பயணத்தைத் தொடங்கியவர்களின் கதை இது. தொலைந்துபோன ஒரு கலாசாரத்தின், ஒரு நிலவெளியின், ஒரு காலத்தின் - நினைவுகளைக் குறியீடுகளாக, மொழியாக, சித்திரங்களாக மாற்றியவர்கள் இவர்கள். பிறந்து, அதிகபட்சமாக முப்பது கிலோமீட்டர் சுற்றளவில் படித்து, எழுத்து, வாசிப்பு என்ற பொதுக்கனவில் சேர்ந்து, இளைஞர்களாக சந்தித்துப் பேசி பரஸ்பரம் ஈர்க்கப்பட்டவர்கள் இவர்கள். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என ஒரு மொழியில் சாதனையாளர்களாக இன்று திகழும் இந்த நால்வரின் வருகை, வேறு எந்த மொழியிலும் சாத்தியமாகாதது; அபூர்வத்தன்மைகொண்டதும்கூட. தமிழ் மொழியைப் பொறுத்தவரை இலக்கியத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுப்பவர்கள் இன்றைக்கும் குடும்பத்திலும் சமூகத்திலும் தனிமையையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்பவர்களே. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சூழ்நிலை இன்னும் கடுமையானது. புதுமைப்பித்தனின் வழி, தனி இருட்டுதான். இன்றுள்ள அளவுக்கு ஊடகங்களோ, பத்திரிகை, பதிப்பகப் பின்னணிகளோ, குறைந்தபட்ச கௌரவத்துக்கான வேலைவாய்ப்போ இல்லாத அக்காலகட்டத்தில்...

ஆத்ம சதகம் - ஆதிசங்கரர்

மனம் புத்தி அகந்தை நினைவு அல்ல செவிகள் சருமம் நாசி கண்கள் அல்ல வெளி பூமி தீ நீர் காற்றும் அல்ல நான் சிதானந்த வடிவமான சிவன் நான் சிதானந்த வடிவமான சிவன் நான் சுவாசமோ பஞ்சபூதங்களோ அல்ல பொருண்மையோ பஞ்சகோசங்களோ அல்ல என் பேச்சு கைகள் கால்கள் நான் அல்ல நான் சிதானந்த வடிவமான சிவன் நான் சிதானந்த வடிவமான சிவன் விருப்பம் விரோதம் பேராசை மாயை பெருமை பொறாமை என்னிடம் இல்லை எனக்கென்று கடமையோ செல்வத்துக்கான ஆசையோ காமமோ விடுதலையோ இல்லை நான் சிதானந்த வடிவமான சிவன் நான் சிதானந்த வடிவமான சிவன் புண்ணியமோ பாவமோ சவுக்கியமோ துக்கமோ நான் அல்ல மந்திரமோ தீர்த்தமோ வேதமோ யக்ஞங்களோ எனக்குத் தேவையல்ல அனுபவிப்பவன் அல்ல அனுபவம் அல்ல அனுபவப் பொருளும் அல்ல நான் சிதானந்த வடிவமான சிவன் நான் சிதானந்த வடிவமான சிவன் மரணபயம் எனக்கில்லை சாதியும் சமயமுமில்லை எனக்குத் தந்தை தாய் கிடையாது நான் பிறக்கவே இல்லை நான் உறவினனோ நண்பனோ ஆசிரியனோ அல்ல நான் சிதானந்த வடிவமான சிவன் நான் சிதானந்த வடிவமான சிவன் நான் இரட்டைகள் ஒழிந்தவன் வடிவமற்றதே எனது வடிவம்...

நான் தான் அந்தப் பூனை இல்லையா?

  அப்படியென்றால் சந்தர்ப்பம் தான் எனது பூனையை உருவாக்குகிறது என்கிறீர்கள். பூனையை ரோமம் மீசை நகங்கள் எலும்புகள் கண்கள் நாக்கு கோடிக்கணக்கான அணுக்கள் வால் அதன் ரசகியம் அதன் கம்பீரம் உருவாக்கவில்லையா ஒரு எலிக்கு ஒரு நாய்க்கு ஒரு எக்ஸ்ரே எந்திரத்துக்கு அனுபவம் தருவது வேறு என்று நீங்கள் சொல்வது கவலையைத் தருகிறது. பரிவு கொண்டது நேசமானதெல்லாம் கண்களை மூடிவிட்டால் போதும் இல்லை எனும்போது எனக்குத் தலைசுற்றத் தொடங்குகிறது. அந்தப் பூனையை ஸ்பரிசித்தது கனவுகள் கண்டது தொலைந்து போனபோது அழுதது அதன் கொட்டாவி வெளியிட்ட வீச்சம் எல்லாம் எங்கே ஐயா நிகழ்ந்தது? நான் தான் காதல் என்றும் நான் தான் எனது பூனை என்றும் சொல்லவருகிறீர்களா?

ஞாயிற்றுக்கிழமையன்று வருபவர்கள்

சில மாதங்களாகப் பார்க்கத் திட்டமிட்டிருந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தின் இறுதிப்பகுதியை நேற்று காலை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தேன். 21-ம் நூற்றாண்டில் வாழத் தகுதியற்றதாகிப் போகும் பூமியிலிருந்து,  மனிதர்கள் வாழ்வதற்கேற்ற கிரகத்தைத் தேடி, பல சிரமங்களைத் தாண்டி வெற்றியடையும் கதை அது. பதினெண் வயதுகளில் மகளையும் மகனையும் விட்டுப்போகும் வானவியல் விஞ்ஞானிகள் குழுவின் தலைவன் கூப்பர், மீண்டும் தனது மகளை செவ்வாய் கிரகத்தில் பார்க்கும்போது மகள் அவனை விட இரண்டு மடங்கு முதுமையில் மரணத்தின் வாசலில் இருக்கிறாள். குழந்தைகள் இறப்பதைப் பெற்றோர் பார்ப்பது கூடாதென்று அறிவுறுத்தி மகள் மர்ப் மருத்துவமனையிலிருந்து தந்தைக்கு விடைகொடுக்கிறாள் . ஒரு தந்தையாக அந்தக் காட்சியில் நான் உறைந்து கொண்டிருந்த போது, எங்கள் வீட்டு கேட்டிலிருந்து ‘அய்யா’ என்று தீனமாக கூப்பிடும் சத்தம் கேட்டது. நாங்கள் வசிக்கும் மாடிவிட்டில் நான் அமர்ந்திருக்கும் கணிப்பொறிக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னலைத் திறந்தேன். இரு மனிதர்கள். ஞாயிற்றுக்கிழமையன்று வருபவர்கள் இவர்கள். சில ஒருவர் கையில் மண்வெட...

அதன் பெயர் அல்ல அநித்யா

காலை மதியம் இரவுகளில் வாடிக்கையாக எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பிஸ்கெட்டும் சாப்பிடத் தொடங்கிய போது அதன் மியாவ் ஆரோக்கியமாக இருந்தது சில நாட்கள் தென்படாமல் போய் என் மகளையும் ஏங்கவைத்தது ஒரு நாள் முதுகில் நீளமான காயத்துடன் வந்து விடை சொல்வது போல் நான் இல்லாத ஒரு நாளில் அவசரமாய் சென்றுவிட்டதாம் இன்னொரு நாள் ஒரு கரும்பூனை படியேறிவந்து அழைக்க அவசரமாய்த் தாவி ஓடியது அதன் மியாவும் பலவீனமாகியிருந்தது அதன் இன்னொரு செவலை வண்ணச் சகாவையும் பாப்பா தெருவில் பார்த்திருக்கிறாள் இப்போது பழைய காயம் ஆறிவிட்டது சில புதிய கீறல்களையும் நேற்று அதன் தலையில் பார்த்தேன் அதன் மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நாங்கள் தான் பொறுப்பென்று முதலில் நினைத்தோம் புதிய காயங்களுக்காகவும் வீட்டுக்கு வராமல் இருக்கும் வேளைகளிலும் வருத்தப்படத் தொடங்கினோம். வரும்போது என்னை நினைத்தால் போதுமென்று சிறிது காலத்திலேயே எங்களைப் பழக்கிவிட்டது பூனை அதன் பெயர் அல்ல அநித்யா. 00