Skip to main content

ஆத்ம சதகம் - ஆதிசங்கரர்

மனம் புத்தி அகந்தை நினைவு அல்ல
செவிகள் சருமம் நாசி கண்கள் அல்ல
வெளி பூமி தீ நீர் காற்றும் அல்ல
நான் சிதானந்த வடிவமான சிவன்
நான் சிதானந்த வடிவமான சிவன்

நான் சுவாசமோ பஞ்சபூதங்களோ அல்ல
பொருண்மையோ பஞ்சகோசங்களோ அல்ல
என் பேச்சு கைகள் கால்கள் நான் அல்ல
நான் சிதானந்த வடிவமான சிவன்
நான் சிதானந்த வடிவமான சிவன்

விருப்பம் விரோதம் பேராசை மாயை
பெருமை பொறாமை
என்னிடம் இல்லை
எனக்கென்று கடமையோ செல்வத்துக்கான ஆசையோ
காமமோ விடுதலையோ இல்லை
நான் சிதானந்த வடிவமான சிவன்
நான் சிதானந்த வடிவமான சிவன்

புண்ணியமோ பாவமோ சவுக்கியமோ துக்கமோ
நான் அல்ல
மந்திரமோ தீர்த்தமோ வேதமோ யக்ஞங்களோ
எனக்குத் தேவையல்ல
அனுபவிப்பவன் அல்ல அனுபவம் அல்ல
அனுபவப் பொருளும் அல்ல
நான் சிதானந்த வடிவமான சிவன்
நான் சிதானந்த வடிவமான சிவன்

மரணபயம் எனக்கில்லை
சாதியும் சமயமுமில்லை
எனக்குத் தந்தை தாய் கிடையாது
நான் பிறக்கவே இல்லை
நான் உறவினனோ நண்பனோ
ஆசிரியனோ அல்ல
நான் சிதானந்த வடிவமான சிவன்
நான் சிதானந்த வடிவமான சிவன்

நான் இரட்டைகள் ஒழிந்தவன்
வடிவமற்றதே எனது வடிவம்
எல்லாப் புலன்களிலும் பரவி எங்குமிருப்பவன்
பந்தத்திலும் இல்லை
விடுபடவும் இல்லை
பிடிபடவும் இல்லை
நான் சிதானந்த வடிவமான சிவன்

நான் சிதானந்த வடிவமான சிவன்

(தமிழில் ஷங்கர்)

Comments

Popular posts from this blog

எரிந்துபோன பாரிஸின் இதயம்

ஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.
ஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.
விக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்

சிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்

அந்த மழைக்கால ஓடை இப்போது
நீர் வற்றியிருக்கிறது
சென்ற வருட மழைக்குப் பின்
தினம்தோறும் காலையில்
நான்கு யுவதில் அங்கே
படகு செலுத்த வருவார்கள்
பேருந்தில் பாலம் கடக்கும்
என்னை அவர்களுக்குத் தெரியாது
அவர்கள் சிமெண்ட் நிறக் காரில்
வருவார்கள்
அந்தக் கார்
மரத்தடி நிழலில்
இளைப்பாறும் காட்சி அலாதியானது
மழைக்கால ஓடையில் நீர்குறைய
அவர்கள் அங்கே வருவதில்லை
படகு தனியே நின்று கொண்டிருக்கிறது
கோடை முடிவடையும் அறிகுறிகள்
ஆரம்பமாகிவிட்டன
இன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்
அவர்கள்
சூரியன் வரும்போதே
குதிரைவால் சடையுடன்
ஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்
படகு இப்போது தனியே
நின்று கொண்டிருக்கிறது.

அனுபவம் அனுபவிப்பது அனுபவிப்பவர்

ஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன.  நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது