Skip to main content

அதன் பெயர் அல்ல அநித்யாகாலை
மதியம்
இரவுகளில்
வாடிக்கையாக
எங்கள் வீட்டுக்கு வந்து
பாலும் பிஸ்கெட்டும்
சாப்பிடத் தொடங்கிய போது
அதன் மியாவ் ஆரோக்கியமாக
இருந்தது
சில நாட்கள்
தென்படாமல் போய்
என் மகளையும் ஏங்கவைத்தது
ஒரு நாள் முதுகில் நீளமான காயத்துடன்
வந்து
விடை சொல்வது போல்
நான் இல்லாத ஒரு நாளில்
அவசரமாய் சென்றுவிட்டதாம்

இன்னொரு நாள்
ஒரு கரும்பூனை படியேறிவந்து அழைக்க
அவசரமாய்த் தாவி ஓடியது
அதன் மியாவும் பலவீனமாகியிருந்தது
அதன் இன்னொரு செவலை வண்ணச் சகாவையும்
பாப்பா தெருவில் பார்த்திருக்கிறாள்
இப்போது பழைய காயம் ஆறிவிட்டது
சில புதிய கீறல்களையும்
நேற்று அதன் தலையில் பார்த்தேன்
அதன் மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும்
நாங்கள் தான் பொறுப்பென்று
முதலில் நினைத்தோம்
புதிய காயங்களுக்காகவும்
வீட்டுக்கு வராமல் இருக்கும் வேளைகளிலும்
வருத்தப்படத் தொடங்கினோம்.

வரும்போது
என்னை நினைத்தால் போதுமென்று
சிறிது காலத்திலேயே
எங்களைப் பழக்கிவிட்டது பூனை
அதன் பெயர் அல்ல அநித்யா.

00

Comments

Popular posts from this blog

ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்
ஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.
பிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…

ப்ரவுனிக்குச் சில கவிதைகள்

பளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.
-ஒரு ஹைகூ கவிதை
ஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்
அழைக்கிறது எல்லையற்று விளையாட.
விளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை
விளையாடு

நிலவொளியில் ஆடும் நரி

ரஸ்கின் பாண்ட்
இரவு வீடு திரும்பும் பாதையில் பிரகாசமான நிலவொளியில் ஆடும் நரியொன்றைக் கண்டேன். நின்று அதை வேடிக்கை பார்த்தேன்
பின்னர் அந்த இரவு அதற்கே ஆர்ஜிதம் என்றுணர்ந்து குறுக்கு வழியைத் தேர்ந்தேன். சிலசமயங்களில் வார்த்தைகள் உண்மையாய் ஒலிக்கும்போது காலைப் பனிக்குள் ஆடும் நரியைப் போல நான்.