Skip to main content

வேண்டாம் எரியட்டும்


நாதியற்றவர் நாம்

என்று ஓர்மை

மெலிதாய் தொடங்கும்போது

உறக்கம், தன் நெசவை ஆரம்பித்துவிடுகிறது

கர்மமோ சாவோ

சில விளக்குகள் எரியாது.

அதை எரியவைக்க

முயற்சிக்கவும் வேண்டாம்.

சில விளக்குகள் அணையாது.

அவற்றை அணைக்க

முயற்சிக்கவும் வேண்டாம்.

Comments