Skip to main content

குயில்


நம் தாமச இருட்டுறக்கத்தின்

போர்வையைத் துளைத்துக் கிழிக்க முயல்கிறது

மீண்டும் மீண்டும்

அந்தக் குயிலின் குரல்.

கதியற்றவர்கள் நாம் என்று அறியுமா

அது.

எங்கெல்லாம்

வந்திறங்கித் தரிக்கிறோமோ

அந்த இடமெல்லாம் கதியற்றது

என்பதை  அறியுமா

அது.

மேலான

ஒரு கிளையிலிருந்து

எங்களைக் குரைத்தெழுப்புவதால்

அதுவே ஒரு கதியற்ற பறவை

என்றதற்குத் தெரியாமல் போகுமா?

Comments