Skip to main content

Posts

மதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு

மதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின் தொடர்ச்சியை தனது கவிதைகளில் கொண்ட ஜயபாஸ்கரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள் இவை …   அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கன்சனின் அறிமுகம் , கவிதையுடனான அறிமுகம் இரண்டும் உங்களுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறதல்லவா?   பேராசிரியரும் அறிஞருமான எஸ். ஆர். கே என்று சொல்லப்படும் எஸ். ராமகிருஷ்ணன், அமெரிக்க கவிஞர் எமிலி டிக்கன்சனை, எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாளின் இரவு இன்னும் நினைவில் உறைந்திருக்கிறது. 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி அது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகட்டலும் சலிப்பும் தொடாததாக அந்தக் கவிஞருடைய படைப்புகளுடனான உறவு தொடர்கிறது. எனக்கு எப்படி அர்த்தமாகிறாள் எமிலி? ஒன்றைத் தேர்ந்த பின் கதவை அடைத்து விடுகிற மன உறுதி, பிறர் பாராட்டு என்பது உயிர்வாழத் த...

பூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்

பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளை அவை வெளிவந்த காலத்துத் தொகுப்புகளை மேய்ந்த போதும், இந்தப் புதிய தொகுப்பின் கவிதைகளைக் கிட்டத்தட்ட முழுமையாகப் படித்துமுடித்தபோதும் இந்தக் கவிதைகளின் காலம் குறித்த கேள்விதான் முதலில் தோன்றியது. கவிதை அகாலத்தில் தானே எழுதப்படுகிறது என்ற எளிய பதிலைக் கொண்டு அந்தக் கேள்வியை முறிக்கப் பார்த்தேன். ஆமாம், அகாலத்தில் எழுதப்பட்டாலும் கவிதையின் பொருத்தப்பாடு என்பது காலத்துடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. கவிதையின் பொருத்தப்பாடும் பின்னணிகளும் மாறும்போது கவிதையைக் காலம் கவ்வுவதற்கு முயன்றபடி இருக்கிறது. காலம் கவ்வாத கவிதைகள் இன்றைக்கும் என்றைக்குமானதாக எப்போதும் பொருத்தப்பாடுடையதாக அகாலத்தின் பொலிவேறி சோபை தழும்ப இருக்கின்றன. ஒவ்வொரு கவிஞனும் தனது காலத்தின் மொழியை எடுத்துக் கொண்டு, தனது தனிச்சாயல் கொண்ட அனுபவங்களைச் சேர்த்து மொழியில் சமைக்கும்போது அவனுடைய ஆற்றல், வேகம், அவனுக்குக் கிடைக்கும் அருள் எல்லாவையும் சேர்ந்து கூடுதலோ குறைவாகவோ தன் சில கவிதைகளை அகாலத்தின் பீடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான். அருள் என்பதை மேலிருந்து, புலப்படாததிலிருந்து அ...

மொழியின் உயிர்த்துடிப்பு கவிதை

தமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக கோடைக்கால குறிப்புகள் தொகுதியின் மூலம் அறிமுகமானவர் சுகுமாரன் . நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை , மொழிபெயர்ப்பு , விமர்சனம் , இதழியல் என பல்வேறு பரிமாணங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் சுகுமாரனின் ஒட்டுமொத்த கவிதைகள் இந்த புத்தகச் சந்தையில் வருவதையொட்டி மின்னஞ்சல் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பேட்டி இது …   உங்களது ஒட்டுமொத்தக் கவிதைகள் தற்போது வெளியாகவுள்ள நிலையில் , உங்கள் கவிதைகள் கடந்த பருவங்களைச் சொல்லுங்கள் ... கவிஞர் ஒருவரின் கவிதைகள் முழுத் தொகுப்பாக வருவது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு என்ற எண்ணம் எனக்கு இல்லை. தனித் தனித் தொகுப்புகளைத் தேடி வாசகர் அலைவதைத் தவிர்க்கும் நடைமுறைச் செயல்பாடு என்றும் அந்தக் கவிஞரின் உலகைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பார்வை உருவாக உதவும் வாய்ப்பு. என்றுமே இதைக் கருதுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது இப்போது செயலாகி இருக்கிறது.  கவி வாழ்வில் கடந்து வந்த பருவங்கள் அந்தந்தக் காலங்களில் வெளிவ...

ஆனந்தின் சுற்றுவழிப்பாதை

பிராணிகளின் அழகும் குறும்பும் படைப்புணர்வும் ததும்பும் உறுப்பாக கடவுள் வாலைப் படைத்தார். என்னுடைய வளர்ப்புப் பிராணி பிரவுனியைப் பார்த்தபின்னர் தான் அதை அறிந்துகொண்டேன். மனிதர்களுக்கு வால் போய்விட்டது. அதை இடமாற்றி இன்னும் சூட்சுமமான வஸ்துவான மனமாக மாற்றியிருக்கிறார் என்று எனக்குப் படுகிறது. அந்த வாலுக்குக் கண் வெளித்தெரியாமல் இருக்கலாம். ஆனால், விழிப்பு உண்டு. வாலுக்குக் கண் இல்லை யார் சொன்னது? விழிப்புள்ளதெல்லாம் கண்களென்று கொண்டால் வாலுக்குக் கண் உண்டுதான். வாலுக்குச் சுயம் உண்டு அதை நான் வளர்க்கும் ப்ரவுனியைப் பார்த்தே அறிந்துகொண்டேன் அதன் வால் வழியேதான் அவன் அறிவிக்கிறான் தான் பிரவுனி தான் நாய் தான் பிராணி நான் நீயல்ல நான் நீங்கள் அல்ல மனிதர்களுக்குச் சுயமே வால் பிராணிகளைப் போல அது கிடைமட்டமானது அல்ல செங்குத்தாய் தரையிலிருந்து வானுலகம் வரை அந்த வால் நீண்டிருக்கிறது அவனுடைய வாலை நான் பிடிக்கும்போதெல்லாம் அவன் தான் தான் என்று ஏன் அலறி அவன் எதிர்க்கிறான் அதற்கு முதல் சாட்சியம் என் அப்பா என் அம்மா அவர் வாலைப் பிடிக்...