முல்லா ஆசிரியராகப் பணியாற்றும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை அழைத்து வந்தாள். தன்
மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று முல்லாவிடம் வேண்டினாள்.
முல்லா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமானார்.
மேலும் கீழும் தங்குதங்கென்று குதிக்கத் தொடங்கினார். திடீரென்று வகுப்பை விட்டு
வெளியே ஓடினார். அந்தப் பெண்மணிக்கோ மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து
எழுந்த அந்தப் பெண்மணி முல்லா வருவதற்காகக் காத்திருந்தார்.
முல்லா சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார். ‘நான்
என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல!’ என்றார்.
‘அம்மணி. நானே எத்தனை பயந்துபோனேன் என்பதை நீங்கள் பார்க்கத் தானே செய்தீர்கள். ஒன்று
நம்மை அச்சுறுத்தும்போது, அது ஆளையா பார்க்கிறது?’
Comments