புது எழுத்து பதிப்பக வெளியீடாக 2016-ம் ஆண்டு வெளிவந்த எனது 'ஞாபக சீதா' கவிதை நூல், தற்போது கிண்டில் பதிப்பாக அமேசானில் கிடைக்கிறது. இதன் இந்திய விலை 99 ரூபாய்.
நண்பரும் கவிஞருமான இசை அறிவுறுத்தியதன் பெயரிலும், நண்பர் செந்தில்குமாரின் உதவியாலும் இந்த மின்னூல் முயற்சி சாத்தியப்பட்டுள்ளது. அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி.
எனது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பான 'ஆயிரம் சந்தோஷ இலைகள்' நூலுக்குப் பிறகு வெளிவந்த இந்தத் தொகுதியின் கவிதைகள் எனது கவிதை வழியில் சில சாத்தியங்களையும் திருப்பங்களையும் காட்டியவை. ஞாபக சீதா என்ற பெயரைப் போலவே, இந்தத் தொகுப்பின் கவிதைகள் பெண்ணின் தன்மை துலங்குபவை.
இலைகளின் நுனியில் குவியும்
பாம்பின் வாலில்
நூலென ஆடும் கூர்மை
அந்தரத்தில் வானில்
ஊசிக்கூர்மை
ஞாபக சீதா
உன் அழகு
உன் அகங்காரம்
இத்தொகுதியை வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணைப்பின் வழியாக வாங்கலாம். மிக்க நன்றி.
ஞாபக சீதா கிண்டில் பதிப்பை வாங்க
Comments