Skip to main content

தனிமைவாசம் – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்


துயருறு இதயமே? 

யாராவது வந்தார்களா மீண்டும்

இல்லை, யாரும் வரவில்லை

ஒரு வழிப்போக்கர் எங்கிருந்தோ வந்திருக்கலாம்

அவரும் போய்விடுவார்

இரவு கடந்துவிட்டது

நட்சத்திரத் தூசிகள் விலகத் தொடங்குகின்றன

கனவுபடர்ந்த மாளிகை விளக்குகளின் தீபங்கள்

மெலிந்து மங்கத் தொடங்குகின்றன

காத்திருப்பில் சோர்ந்த சாலைகள்

அனைத்தும் தற்போது ஆழ்ந்த உறக்கத்தில்.

அனுதாபமே இல்லாத புழுதிபடர்ந்த தெரு

எண்ணற்ற காலடித்தடங்களால் போர்த்தப்பட்டுள்ளது

 

விளக்குகளை ஊதியணைத்துவிடு

கோப்பையிலிருந்தும் ஜாடிகளிலிருந்தும்

திராட்சை ரசத்தைக் கொட்டி அகற்றிவிடு

அந்தி வந்துவிட்டது

உறங்காத உன் கண்களை

இமைகளால் மூடு

இப்போது இங்கே

யாரும்

வரப்போவதில்லை.

Comments

Gorky noel said…
துயருறு இதயமே? ✨