Skip to main content

Posts

Showing posts from November, 2026

கத்தியின்றி ரத்தமின்றி நடந்த இன அழித்தொழிப்பு ஒன்றின் கதை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியாவின் செவ்வியல் நடன வடிவமாக அறியப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தோடு சேர்ந்து எழுந்த கலைவடிவமான பரத நாட்டியத்துக்கும், ஆரம்பகால தமிழ் சினிமாவுக்கும் இடையிலான உறவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களை நுட்பமாக ஆராயும் ஆங்கில நூல்தான் செல்லுலாய்ட் க்ளாசிசம் (CELLULOID CLASSICISM). தமிழ்நாட்டில் மரபாய் இருந்த கலைவடிவங்களான கூத்து, இசை நாடகம், ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்கள், பார்சி நாடக வடிவம், தேவதாசிகளின் சதிராட்டம் ஆகியவற்றிலிருந்து உரம்பெற்று, நவீன கலைவடிவமாக எழுந்த சினிமா வடிவத்தோடும் உரையாடல் நடத்தி படித்த உயர்மக்களின் கலை அடையாளமாக எழுந்த பரத நாட்டியம், தன் வேர்களையும், தன் மூலகங்களையும் வரலாற்று நினைவிலிருந்தே இல்லாமலாக்கிய கதையையும் பேசும் நூல் என்பதால் ஹரிகிருஷ்ணன் எழுதிய இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. காலம்காலமாக தேவதாசிகள் என்ற சமூகமாக அறியப்பட்டு, புரவலர்களின் வீடுகள், ஆலயங்கள், சபைகளில் பாடி, ஆடி வீணை தனம்மாள், பாலசரஸ்வதி போன்ற மேதைக் கலைஞர்களை சமீபத்திய நினைவுகளின் அடையாளமாகக்கொண்ட ஒரு அறிவுமரபை, சத்தமில்லாமல் அழித்து பரதநாட்டியம் என்ற ...

குழந்தை, மேதை, கோமாளி

நண்பர்களான வரதன், கவிஞர் இசை, நாவலாசிரியர் சாம்ராஜ் எல்லோரும் ஏற்கெனவே எனக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் மிஷ்கினுக்கு அறிமுகமாகிவிட்டனர். நான் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் கவிஞர் ஆசையை கௌரவிக்கும் எத்திராஜ் கல்லூரி நிகழ்ச்சியிலும், கவிஞர் லீனா மணிமேகலை புத்தக வெளியீட்டு விழாவிலும் பக்கத்து இருக்கைக்காரராக, அடுத்து இருப்பவர் மீது எந்த கவனமும் இல்லாத ‘சினிமா’ நபராகவே மிஸ்கினையும் உணர்ந்ததால், நண்பர்கள் அவரோடு நெருக்கமானாலும், கூடுமானவரை மிஸ்கினுடனான சந்திப்பைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். 2021 ஆம் ஆண்டின் குளிர்கால மாதமொன்றில், நவம்பராகவோ டிசம்பராகவோ இருக்கலாம். நண்பர் வரதன் என்னுடன் எனது வீட்டில் நள்ளிரவில் தங்கியிருந்தபோது, மிஷ்கினிடமிருந்து அவருக்கு போன் வந்தது. ஷங்கர் வீட்டில் தங்கியிருப்பதாக அவர் சொல்கிறார் போனில். உடனடியாக மிஷ்கின் என்னிடம் போனில் பேசுகிறார். உடனே வாருங்கள் வீட்டுக்கு என்கிறார். இப்படித்தான் நள்ளிரவில் மிஸ்கினுடனான உறவு தொடங்கியது. எஸ்.வி.ராஜதுரை, நாசர் எல்லோரும் அவருக்குத் தந்தையார் ஸ்தானத்தில் இருப்பவர்கள். அவர் வீட்டின் சுவரில் அவர்களது புகைப்படங்களை அவரை ஆகர்ஷ...

சுந்தர ராமசாமியின் இரண்டு கவிதைகள்

புதுக்கவிதையின் முதல் தலைமுறை முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அவரது இரண்டு கவிதைகளைப் பற்றி நண்பர் காந்தியுடன் பேசிக்கொண்டிருந்தேன். இல்லாத போது வரும் நண்பன், நம்பிக்கை என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட இரண்டு கவிதைகள். இந்த இரண்டு கவிதைகளையுமே ஒரு கவிஞன் இன்று எழுதமுடியாது...ஏனெனில், செல்பேசி போன்ற செய்தி சொல்லும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. நான் இல்லாதபோது ஒரு நண்பன் வரவே முடியாது...அத்துடன் நம்பிக்கை கவிதையில் சுந்தர ராமசாமி தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன் அச்சு அசல் என் நண்பன். மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன். வேறு யாரோ. அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான். என்று எழுதியிருக்கிறார். இன்றைக்கும் மிக ஆழமான அனுபவத்தைத் தரக்கூடிய கவிதை இது. மறைந்தவன், நண்பன் என்ற குறிப்புகளின் மூலம் நான், சுந்தர ராமசாமியின் அகாலத்தில் மறைந்த நண்பர் கிருஷ்ணன் நம்பி குறித்த கவிதை என்று புரிந்துகொள்கிறேன்.  ஒருவரை உற்றுப்பார்க்கும்போதுதான், அவன்/அவள் நமக்கு பரிச்சயமானவரா, அன்னியரா என்ற குறிப்பை அடைகிறோம்.  இக்காலத்தில் நாம் யாரையாவது உற்றுப்பார்க்கிறோமா? உற...