ஆயிரம்
முறைகள்,
எனது அங்கமாக இருக்கும்
இரண்டு மொழிகளிலும்,
எனது உதடுகள் உச்சரித்தன;
தொடர்ந்து மந்திர ஜெபத்தை எனது உதடுகள் உச்சரித்துக்
கொண்டிருக்கவும் செய்யும்;
ஆனாலும் அதில் ஒருபகுதி மட்டுமே எனக்குப் புரிந்தது.
இந்த நாளின் காலையில்
–
ஜூலை 1, 1967 –
நான் ஒரு பிரார்த்தனையை
முயற்சிக்க ஆசைப்பட்டேன்;
அது அந்தரங்கமானது;
வழிவழியாக
வந்தது அல்ல.
அப்படியான ஒரு முயற்சி மனிதசக்தியைத்
தாண்டிய அர்ப்பணிப்பை வேண்டுவது என்று எனக்குத் தெரிந்திருந்தது.
அந்தப் பிரார்த்தனையிலிருந்து எதையும் கோருவதற்கு நான் விலக்கப்பட்டவன்.
எனது
கண்களை இரவு நிரப்பக்கூடாது என்று
வேண்டுவது பைத்தியக்காரத்தனம்;
குறிப்பாக சந்தோஷமாக,
நியாயமாக அல்லது ஞானவான்களாக இல்லாத,
பார்க்கும் திறனுள்ள ஆயிரம் மனிதர்களை நான் அறிவேன்.
காலத்தின்
அணிவகுப்பென்பது காரண காரியங்களின் வலையாக
இருப்பதால்,
கருணையின் பரிசாக எதைக் கேட்டாலும்,
அது எத்தனைதான் சிறியதாக
இருந்தாலும்,
அந்த இரும்புவலையின் கண்ணியை
உடைக்கவோ,
ஏற்கெனவே உடைந்திருக்க வேண்டுமென்றோ கோருவதுதான்.
அப்படியான அற்புதத்தைக் கேட்கும் வசதி யாருக்கும் கிடையாது.
எனது அத்துமீறல்கள்கள் மன்னிக்கப்பட வேண்டுமென நான் கோரமுடியாது;
மன்னிப்பு
என்பது இன்னொருவரின் செயல் என்பதால் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே முடியும்.
மன்னிப்பு பாதிக்கப்பட்ட தரப்பைத் தூ
ய்மைப்படுத்துகிறதே தவிர,
தவறிழைத்தவனை அல்ல;
அவன் மன்னிப்பால் துளியும்
தீண்டப்படுவதே இல்லை.
எனது சுதந்திர விருப்பின்
சுயேச்சைத்தன்மை என்பது ஒருவேளை மாயையாக இருக்கலாம்;
ஆனால் என்னால் அளிக்க முடியும்.
அல்லது அளிப்பதை நான் கனவுகாண இயலும்.
எனதுடையதாக இல்லாத தைரியத்தை நான் அளிக்க இயலும்.
என்னிடம் உறைந்திருக்காத நம்பிக்கையை நான் கொடுக்க முடியும்.
என்னிடம் எனக்குத் தெரியாத,
அல்லது கணத்தோற்றமாகவே தெரியும் கற்பதற்கான விழைவை நான் கற்றுக்கொடுக்க முடியும்.
நான் கவிஞனாக அல்ல,
நண்பனாகவே நினைவுகூரப்படவே விரும்புகிறேன்.
டன்பார் அல்லது ப்ராஸ்ட் அல்லது நள்ளிரவில் ரத்தம் சிந்தும் மரத்தை,
சிலுவையை,
பார்த்த அந்த மனிதனின் கவிதையை
யாராவது உச்சாடனமாகத் திரும்பத் திரும்ப ஒலிக்கவேண்டுமென்றும்,
அந்த வார்த்தைகளை அவன்
முதல்முறையாக எனது உதடுகளில் இருந்து
கேட்டதை அகத்தில் பிரதிபலித்துப் பார்க்க வேண்டுமென்றும் விரும்புகிறேன்.
மற்ற எதுவும் எனக்குப்
பொருட்படுத்தத் தகுந்ததே அல்ல.
இந்தப் பிரபஞ்சத்தின் திட்டங்கள் நம்மால் அறியவியலாதது.
ஆனால் தெளிவாக சிந்திக்க முடிவதோடு பிரபஞ்சத்தின் திட்டங்களுக்கு (
நமக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படாது)
உதவுவதற்கு நேர்மையுடன் செயல்படவும் நம்மால் இயலும்.
நான்
பூரணமாக மரணமடைய விரும்புகிறேன்; இந்த உடலுடன் மரணமடைய
விரும்புகிறேன் – எனது துணையுடன்.
Comments