Skip to main content

Posts

பாலத்தின் மீது காதலர்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அவன் ஏரியை நோக்கி வெளியே அந்தரத்தில் கால்களை சேர்த்து தொங்கவிட்டிருந்தான் அவள்  அவனது தோளில் சாய்ந்திருந்தாள் ஒரு உடைந்த பாலத்தின் கல்நுனிதான் ஆனால் பெரியதொரு மஞ்சள் சிகப்பு பூக்களாக அவர்கள் அங்கே ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர் அவர்களின் அந்த சாய்மானம் போதும் அந்த மெல்லிய கோட்டுச்சித்திரம் போதும் சீக்கிரத்தில் மறைய இருக்கும் அந்த சாயங்காலம் போதும் அவர்கள் அமர்ந்திருக்கும் உடைந்த பாலத்தின் சிறுநுனி போதும்.

பறக்கும் அனுபவம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்த அபாய சவாரியில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருமே மரணக்கூச்சலை இட்டனர். அந்த தீம்பார்க் முழுவதுமே எழும் கூச்சலின் பின்னணி இப்போது எனக்குப் புரிந்துபோனது. அவர்கள் எல்லாருக்கும் மரண சந்தர்ப்பத்தைப் போன்ற ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருக்கிறது. முற்றிலும்  மனித இயற்கைக்கும், புவிஈர்ப்பு விசைக்கும் எதிரான ஒரு சவாரி அது. அடுக்கடுக்காக வளைந்து, பின்னி சுற்றிச் சுழலும்   தண்டவாளப் பாதையில் இருக்கும் ஒரு சிறு பொம்மை வண்டியில் ஏறி, வேகம் முடுக்கப்பட்டு நம் உடலை பக்கவாட்டாக, தலைகீழாக, முன் பின்னாக கவிழ்க்கும் அந்தச் சவாரியை நடுவில் நாம் நடுவில் நிறுத்த நினைத்தாலும் முடியாது. நம்மோடு சிறுவர் சிறுமியரும் இருக்கிறார்கள் என்ற கூச்சத்தைக் கூட மறந்து, அந்த ரோலர் கோஸ்டரை இயக்குபவரைப் பார்த்து சத்தமாக கூவி நிறுத்தச் சொன்னேன்.   கீழே இருக்கும் அவர் அதையும் ரோலர் கோஸ்டர் சவாரி அனுபவத்தின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டார். பின்னர் சவாரியின் ஒரு புள்ளியில் உடலைப் பிணைத்திருக்கும் கம்பியை இறுக்கமாகப் பிடித்து, கால்பாதத்தை நான் உட்கார்ந்திருக்கும் சீட்டுக்கு முன் நீட்டி,...

திருப்பாகம்

தி ருப்பாகம் என்ற பெயரை இட்டு இணையத்தில் தேடியபோதுதான், அது  அழிந்துவரும் பதார்த்தங்களில் ஒன்று என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு Sweet tooth ஏற்பட்டுள்ளதால் இருக்கலாம். இந்த மழைநாள் மாலையில், எங்கள் ஊர் திருநெல்வேலியின் ஞாபகங்களில் ஒன்றாக இருக்கும் திருப்பாகம் என்னும் இனிப்பை சாப்பிடவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. சில ஆசைகள் நிறைவேறிவிடக் கூடியவை. அடை,அவியல், சொதி போன்றவைகளைக் கூட அம்மாவை தொலைபேசியில் அழைத்து, அவள் கண்டபடி ஏசிக்கொண்டே கூறும் பக்குவத்தைக் கவனித்து, நாக்கின் நினைவிலிருக்கும் ருசியையும் மொழிபெயர்த்து கிட்டத்தட்ட திருநெல்வேலியை சென்னையில் உள்ள எங்கள் சமையலறைக்கு சில சமயங்களில் கொண்டுவந்து விடமுடியும்.  ஆனால் திருப்பாகம் என்னும் அரிய தெய்வீக இனிப்பைச் செய்வது சுலப சாத்தியமில்லை. தெய்வீக இனிப்பு என்று நான் சொல்வது மிகையாக இருக்கலாம். அதன் பெயரில் ஒரு மயக்கம் இருப்பதாக எண்ணலாம். ஆனால் திருப்பாகம் என்னும் பெயர் அந்த இனிப்புக்கு மிகவும் பொருத்தமானதே. ஆனால் திருப்பாகம் என்று சொல்லும்போது, சமயம், கோவில் தொடர்பான ஒரு உணர்வு எழுவதையும் தவிர்க்க முட...

படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது வளர்ப்பு மீன் தொட்டி அழுக்கடையும் போதும்,கலங்கியிருக்கும் தோறும் நான் பதற்றத்துக்குள்ளாகிறேன். நான் நம்பிக்கையில்லாமல், கலங்கிக் குழம்பும் வேளைகளிலும், எனது மீன்தொட்டியின் நீர் அழுகத் தொடங்குகிறது. மீன்களின் இயக்கம் நீரில் குறைகிறது. அவை மூச்சுவிடத் திணறுவதை நான் அனுபவிப்பேன். அதன் தலைகள் ரத்தச்சிவப்பை அடைகின்றன. எனது மீன்தொட்டியில் மூன்று தங்க மீன்கள் உள்ளன. ஒன்று மூத்தது, பெரியது. இரண்டு மீன்கள் குட்டிகள். அதில் எது ஆண், எது பெண் என்று எனக்குத் தெரியாது. நான் பெரிய மீனை அம்மா என்றும் குட்டிகளை குழந்தைகள் என்றும் கற்பிதம் செய்துள்ளேன். அம்மா மீனின் பெயர் மீனாட்சி. அதன் உடலை விட அதன் வால் பெரிதாக வளர்ந்துவிட்டது, என் கனவு, லட்சியங்கள், ஆசைகள் மற்றும் கற்பனைகளைப் போல வளர்ந்துவிட்டது. மீனின் உடலை விட நீளமான மெல்லிய வாலிழையின் நுட்பங்கள்தான் அழகாக இருக்கிறது, அதுவும் என் கனவைப் போலவும் லட்சியங்களைப் போலவும். நான் கொடுக்கும் உணவுத்துகள் மட்டுமே அந்த வாலுக்கு காரணமில்லை. மீனாட்சியின் வால் இழை வடிவமைப்பை ஒத்திருக்கும் வேறு தங்...