Skip to main content

மெய் ஞானம் - கலீல் ஜிப்ரான்


பூனைக்கூட்டம் ஒன்று காட்டில் ஞானியான நாய் ஒன்றைக் கடந்தது. 

பூனைகள் மிக அருகில் வந்தும் தன்னைக் கவனிக்காமல் தனது அருள்மொழிகள் எதையும் கேட்காமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்கிறார்களே என்று அந்த நாய் ஆச்சரியம் கொண்டது. 

அந்தப் பூனைக்கூட்டத்தின் நடுவே பெரிய உடலைக் கொண்ட பழுப்பு நிறப்பூனை முன்னால் வந்து தமது தோழர்களைப் பார்த்து, “பிரார்த்தியுங்கள். திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தால் சந்தேகமேயில்லை; வானிலிருந்து எலிகள் மழையாகப் பொழியும்.” என்று போதித்தது.

இதைக் கேட்ட ஞானி நாய் விழுந்து விழுந்து சிரித்தது. 

“ஓ குருட்டுப் பூனைகளே, எங்கள் மூதாதைகள் எழுதி வைத்துப் போனது எனக்குத் தெரியாதா? விசுவாசமும் பணிவும் கொண்டு பிரார்த்தனை செய்தால் எலிகள் அல்ல, எலும்புகள் தான் மழையாகப் பொழியும்.” 

Comments