Skip to main content

நரியின் விருந்து - கலீல் ஜிப்ரான்



காலை புலர்ந்தது. ஒரு நரி தனது நிழலைப் பார்த்துப் பெருமிதமாகச் சொன்னது. 

‘இன்று மதிய விருந்தாக எனக்கு ஒட்டகம் கிடைக்கும்’.

அப்போதிருந்து ஒட்டகங்களைத்தேடித்தேடி அலைந்தது. பின்மதியமாகிவிட்டது. நினைத்தமாதிரி விருந்து அமையவில்லை. திரும்பவும் நரி தனது நிழலைப் பார்த்துச் சொன்னது.

‘சரி, இப்போதைக்கு ஒரு எலி கிடைத்தால் போதும்.’

Comments