கிடாரின் தேம்பல் தொடங்கிவிட்டது.
விடியலின் கோப்பைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன.
கிடாரின் தேம்பல் தொடங்கிவிட்டது.
அமைதிப்படுத்துவதில் பிரயோஜனம் இல்லை.
அமைதிப்படுத்துவது அசாத்தியம்.
தண்ணீர் கரைந்தழுவதைப் போல
காற்று பனிப்பொழிவில் இரைந்தழுவதைப் போல
கிடார் தேம்பியழுகிறது
அமைதிப்படுத்துவது அசாத்தியம்.
அது தொலைவில் உள்ள பொருள்களுக்காக
அழுகிறது.
உஷ்ணமான தென்மணல் பரப்புகள்
வெள்ளை காமேலியா பூக்களுக்காக ஏங்குகின்றன.
இலக்கில்லாத அம்பு அழுகிறது
காலை இல்லாத மாலை அழுகிறது
அத்துடன்
கிளை மேல் இறந்த முதல் பறவையும்
அழுகிறது.
ஓ, கிடாரே!
இதயம்
ஐந்து வாள்களால் சாக்காயம் பட்டிருக்கிறது.
Comments