கதவுகள், ஜன்னல்கள், கூரைகள்
மௌனத்தின் சுமைதாளாமல்
நொறுங்கிவிட்டன.
வலியின் நீரோட்டம் வானிலிருந்து வழிகிறது.
துயரம், பிரிவாற்றாமையால் நிரம்பி
நிலவொளி கூறும் கதை
நெடுஞ்சாலைகளின் புழுதியில்
உழன்றுள்ளது.
படுக்கையறைகளில் மங்கிய இருள்.
பலவீனமான சுருதியில் ஒலிக்கும்
இருப்பின் சித்தார்
மென்மையான தொனிகளில்
இரங்கற்பாக்களைப் பாடுகிறது.
Comments