என் முன்னால்
இரவின் சுவர்
நேசத்துக்குரியவளின் முகபிம்பம்
இதயத்தின் ஆடியிலிருந்து
ரத்தம் மீண்டும்
சொட்டத்தொடங்குகிறது
வெளியே விடாமல்
எனக்கேயான வழியில்
ஒடுக்கிக்கொள்ளும்போது
என் பார்வை மீண்டும் மங்குகிறது
மிதித்துத் துவைத்தெடுக்கப்பட்ட
எனது வேட்கையால்
நொறுக்கப்பட்டு
என் உடல் முழுவதும்
மீண்டும் நோவெடுக்கத் தொடங்குகிறது.
Comments