இன்று
மீண்டும்
வலி, பிரிவாற்றாமையின்
சரடைக் கொண்டு
உன் நினைவின்
அரும்புகளைத் தொடுத்தேன்
நேசத்தைத் துறந்ததால் உண்டான
பாழ் நிலத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை.
நாம் காதலித்த பருவங்களின் மலர்களையும்
சேர்த்து
உனது வாயிற்படியை அலங்கரித்தேன்
அதுவும் போதாது
இன்னொரு புனிதமான படையலையும்
செய்தேன்.
பிரிவின் சாம்பல்,
ஆசையின் விளிம்பில் கட்டப்பட்ட
கூடலின் மலர்கள்.
Comments